கசகசா மாஸ்க்

கசகசா மாஸ்க்
நம் வீட்டு அஞ்சரை பெட்டியில் அதிகம் பயன்படுத்தப்படாமல் அமைதியாக இருக்கும் ஒரு பொருள் கசகசா.

 ஆனால் இது உடலுக்கு உட்புறம் மட்டுமல்ல உடலுக்கு வெளிப்புறமும் சரும ஆரோக்கியத்தில் பல நலன்களை கொடுக்க வல்லது.

 இதோ முகம் பிரகாசிக்க சில கசகசா மாஸ்க் :

 தண்ணீரில் கசகசாவில் சேர்த்து கலந்து முகத்தில் ஸ்கிரப்பர் போல் பயன்படுத்த இறந்த செல்கள், வறண்ட சரும பிரச்சனைகள் சரியாகி முகம் புத்துணர்ச்சி பெறும் .

பாலுடன் கசகசா சேர்த்து அரைத்து அந்த கலவையுடன் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவ வறண்ட சுருக்கங்கள் நிறைந்த சருமம் புத்துணர்வு பெற்று உடனடி பளபளப்பு கிடைக்கும்.

 சிலருக்கு வெயில் அதிகமானால் அரிப்பு, எரிச்சல் சருமத்தில் உண்டாகும் அவர்கள் பாலில் கசகசாவை ஊற வைத்து அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பாதிக்கப்பட்டு இடத்தில் தடவி வர குணமாகும்.

 கை நிறைய கசகசாவை எடுத்துக்கொண்டு உடன் தயிர், வெள்ளை நிற மிளகு கலந்து அரைத்து அதனை அப்படியே தலைமுடியில் பேக் போல் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் அப்படியே ஊற விடவும்.  பொடுகுத் தொல்லை இனி இல்லை என சொல்வீர்கள் .
கசகசா புதிதாக எடுத்த தேங்காய் பாலுடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து முடிகள் தடவி 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின்னர் ஷாம்பு கொண்டு தலை முடியை அலசவும் .இதனை தொடர்ந்து சில வாரங்கள் செய்ய தலைமுடியில் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை