மன அழுத்தம் ஏற்படுத்தும் பிரச்சனைகள்
மன அழுத்தம் நம் உடல் நிலைமையும் பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.
உச்சி முதல் மூட்டு வரை பல்வேறு பாதிப்புகளை இது ஏற்படுத்துகிறது.
மன அழுத்தம் அதிகரிக்கும் போது அது கூந்தலின் இயல்பான வளர்ச்சியை பாதிக்கிறது .
தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு முடி அதிகம் உதிர்கிறது.
தூக்கமின்மை, தலைவலி, எரிச்சல், பதற்றம், சோர்வு , வேலைகளை இயல்பாக செய்யும் சக்தி இல்லாமல் போவது போன்ற உணர்வு மனநிலை அடிக்கடி மாறுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
மன அழுத்தம் அதிகமாகும் போது நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் உடலில் இன்சுலினை இயல்பாக வேலை செய்ய விடாமல் தடுக்கின்றன.
இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
மன அழுத்த பிரச்சனையை நீண்ட காலம் கண்டுகொள்ளாமல் விட்டால் உயர் ரத்த அழுத்தம், இதயம் சீரற்ற துடிப்பது உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும் .
மன அழுத்தம் உணவு செரிமானத்தையும் மந்தமாக்குகிறது.
ஸ்ட்ரெஸ் காரணமாக அல்சரும் வருகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக வலியையும் இது தருகிறது.
மூட்டு வலியால் ஏற்கனவே அவதிப்படும் நபர்களுக்கு அந்த வலியை மன அழுத்தம் அதிகரிக்கச் செய்கிறது.
பயனுள்ள தகவல்
பதிலளிநீக்கு