தலைவலியா?
இதோ சில டிப்ஸ்
ஐந்தாறு துளசி இலைகள், ஒரு சிறு துண்டு சுக்கு, இரண்டு லவங்கம் சேர்த்து மைபோல அரைத்து நெற்றியில் பற்று போட்டால் கடுமையான தலைவலி காணாமலேயே போய்விடும்.
விரலி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கில் உறிஞ்ச தலைவலி உடனே நீங்கிவிடும்.
நெற்றியில் குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும் .
தாய்ப்பாலில் சிறிதளவு சுக்கை அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி தானாகவே தனிந்து விடும்.
டி அல்லது காபியில் சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்தால் தலைவலி குறையும்.
திருநீற்று, பச்சிலை சாறையும், தும்பை சாரையும் கலந்து பச்சைக் கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலைபாரம் இறங்கி தலைவலி குணமாகும்.
வெள்ளரிக்காய் துண்டில் சிலவற்றை வைத்து தீயில் சுட்டு அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குறையும்.
கடுகை நன்றாக அரைத்து நெற்றியிலும் பின் கால் பாதத்தின் கீழ் பகுதியிலும் பூசினால் தலைவலி நீங்கும் புதினாவை அரைத்து துணியில் தடவி அந்த துணியை நெற்றியில் போட்டால் விரைவில் தலைவலி குறையும்.
ஜாதி மல்லி இலையுடன் சிறிது சுக்கு, சிறிதளவு பசும்பால் சேர்த்து அரைத்து நெற்றி, கண் பகுதிகளில் தடவி லேசான நெருப்பில் காண்பிக்க தலைவலி உடனே தலைத் தெறிக்க ஓடிவிடும்.
கற்பூரவள்ளி இலையை நன்கு கழுவி அதை கசக்கி சாறு பிழிந்து அதில் ஒரு அவுன்ஸ் வீதம் காலை மாலை என ஒருவேளை சாப்பிட்டாலே போதும்.
புளிப்பான ஆப்பிளை உப்பு சேர்த்து அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் கடும் தலைவலி கட்டுப்படும்.