கோபத்தை குறைக்கும் கொழுப்பு
கொழுப்பு என்றாலே உடல் நலத்திற்கு கேடானது என்ற தவறான கருத்துள்ளது. ஆனால் கொழுப்பு சத்து உடல் நலத்துக்கு இன்றியமையாதது நல்ல கொழுப்பு களில் முதன்மையானவை ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள்.
இவை சில உணவுகளில் உள்ளன ஆனால் மிக அதிகமான அளவில் சில மீன்களில் உள்ளன .
மீன் எண்ணெய், மாத்திரைகள் இந்த கொழுப்பு அதிகமாக இருப்பதால்தான் அவை இதயத்திற்கு நன்மை தருபவை எனப்படுகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலை விஞ்ஞானிகள் சமீபத்தில் மேற்கண்ட ஆய்வு ஒன்று இந்த ஒமேகோ - 3 கோபத்தையும் ஆக்ரோசத்தையும் குறைப்பதாக கூறுகிறது.
அளவுக்கு மீறிய கோபம், ஆக்ரோஷம் நம் உடல் நலத்தை கெடுக்கிறது.
சில நேரங்களில் வன்முறையை தோற்றுவித்து பிறருக்கு தீங்கு விளைவிக்க வைக்கிறது.
இதனால் இது ஒரு சமூகப் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் அதிக அளவிலான ஒமேகா-3 சத்துள்ள மீன்களை உண்பது தற்கொலை எண்ணத்தை குறைப்பதாக ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டார்.
இதை தொடர்ந்து இங்கிலாந்தில் ஒமேகா 3 தெரிய உள்ளிட்ட சில சத்து நிறைந்த உணவு சிறைவாசிகளுக்கு கொடுக்கப்பட்டது .
இது அவர்களிடமிருந்து வன்முறை எண்ணத்தை குறைத்தது.
பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒமேகா-3 மருந்தை ஆண் பெண் இரு பாலினத்தையும் சேர்ந்த பல்வேறு வயதினருக்கு கொடுத்து சோதித்தனர்.
ஆய்வு முடிவில் அவர்களின் ஆக்ரோஷம் குறைந்திருப்பது தெரிய வந்தது .
ஒமேகா-3 மூளையின் செயல்பாடுகளை ஊக்குவித்து நரம்பு மண்டலத்திற்கு நன்மை செய்வதுதான் இதற்கு காரணம் என்பது விஞ்ஞானிகள் கருத்து.