கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிளகு
தினமும் சமையலில் பயன்படுத்தும் மசாலா பொருட்களில் ஒன்றான மிளகு ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது.
இது உணவின் சுவையை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது .
கர்ப்பிணிகள் தினமும் குறைந்த அளவு மிளகு உணவில் சேர்த்து வருவதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும்.
கர்ப்ப காலத்தில் பலரும் செரிமான பிரச்சனைகளால் சிரமப்படுவார்கள்.
மிளகில் உள்ள மருத்துவ குணங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமானத்தை சீராக்கும்.
வயிறு உப்புதல், வாயு தொல்லை, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஆக்சிஜன் ஏற்ற சேதங்களால் எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.
மிளகில் இருக்கும் கரோட்டினாய்டு என்னும் ஆக்சிஜனேற்றி டிஎன்ஏவில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதோடு புற்று நோய்க்கான அபாயத்தையும் குறைக்கிறது.