மாதவிலக்கு நீண்ட நாட்கள் நீடித்தால் என்ன செய்ய வேண்டும்
பெண்களுக்கு மாதவிடாய் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும்.
ஏழு நாட்களுக்கு மேல் ரத்தப்போக்கு தொடர்ந்தால் அது கவனிக்கப்பட வேண்டியதாகும் .
இயல்பை விட நீண்ட காலம் நீடிக்கும் மாதவிடாய் ஹைப்பர் மெனோரியா மற்றும் மெனோராஜியா இன்று அழைக்கப்படுகிறது.
7 நாட்களுக்கு மேல் அதிக அளவில் வெளியேறும் ரத்தப்போக்கு கனமான உணர்வு , குமட்டல், வாந்தி, கடுமையான வலி, எடை இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
ஹார்மோன் கோளாறு கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனை, மாதவிடாய் நிற்கும் வயது, சிலவகை மாத்திரைகளை உட்கொள்வது போன்றவை நீண்ட நாட்களாக நீடிக்கும் மாதவிடாய்க்கு காரணமாகும்.
சில நேரங்களில் இது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் .
இரும்பு சத்து குறைபாடு நீண்ட கால மாதவிடாய் போக்கிரிக்கு வழிவகைக்கும்.
தினசரி உணவில் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பது, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
பாதாம், திராட்சை, முட்டை, பீன்ஸ், கீரை வகைகள் இறைச்சி, சிவப்பு நிற காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களில் இரும்பு சத்து நிறைந்துள்ளது.
இதை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது .
மாதவிடாய் போக்கு நீண்ட நாள் இருக்கும் பெண்களுக்கு வைட்டமின் குறைபாடு இருக்கும் .
சீஸ், முட்டை, மீன், பால், தயிர், இறைச்சி மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகள் , பழங்களை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.