இந்தியாவிற்கு பிரியாணி வந்த கதை
பெரிசிய நாட்டு போர் வீரர்களின் பிரதான உணவு பிரியாணி தான்.
போர் நேரத்தில் வகையாக சமைத்து நன்றாக சாப்பிட முடியாது என்பதால் போர் முடிந்த பிறகு காட்டு விலங்குகளை வேட்டையாடி எடுத்துச் சென்று அரிசி, மசாலா பொருட்களுடன் கலந்து புளி சாதம் டைப்பில் சாப்பிட்டு இருக்கிறார்கள்.
இப்பழக்கமே பரிணாம வளர்ச்சியில் பிரியாணியாக வளர்ந்து இருக்கிறது.
இதுவும் எதேச்சையாக நடந்தது தான் என்கிறார்கள்.
அதாவது போர் முடிந்த பிறகு உணவு சமைத்து வீரர்கள் சாப்பிடுவார்கள் அல்லவா? ஒரு முறை அவசரமாக வீரர்கள் கிளம்ப வேண்டி இருந்தது அப்போது மசாலா கலவையை தடவிய ஆட்டுக்கறியை தூக்கிப் போட மனமில்லாமல் அதையும் எடுத்துக்கொண்டு தங்கள் ஊர் நாட்டுக்கு திரும்பி இருக்கிறார்கள்.
வந்து சேர ஒரு நாள் ஆனது.
இதற்குள் மசாலா நன்றாக ஆட்டுக்கறியில் ஊறிவிடவே, சமைத்து சாப்பிட்ட போது அப்படி ருசித்து இருந்தது.
இதிலிருந்து தான் பிரியாணியை ஊற வைத்து சமைக்க ஆரம்பித்தார்கள் என்கிறார்கள் உணவியல் வல்லுனர்கள் .
சரி, இந்தியாவுக்கு எப்போது பிரியாணி வந்தது?
முகலாயர்கள் காலத்தில் போர் வீரர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லாததைக் கண்ட ஷாஜகானின் மனைவி மும்தாஜ் பிரியாணி செய்முறையை கற்றுக் கொடுத்தார்.
அன்று முதல் முகலாயர்கள் ஆட்சி செய்த இடங்களில் எல்லாம் பிரியாணியும் பரவியது.
ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக் காலத்தில் முதன் முதலில் இதில் நெய் சேர்த்தார்கள் .
அந்தந்த நிலப்பரப்புகளில் கிடைக்கும் வாசனை பொருட்களையே அந்தந்த ஊர் பிரியாணியில் சேர்ப்பார்கள்.