அறையை விட்டு வெளியே வராத குழந்தைகள்
கோமாரி என்றால் மாடுகளுக்கு வரும் நோய் என்று நமக்கு தெரியும். அது என்ன ஹிக்கி கோமாரி ?
இது இன்றைய குழந்தைகள் டீனேஜ் மாணவ, மணிகள் என்று பல்வேறு தரப்பினருக்கு தோன்றும் நோய். பெயரை கேட்டாலே இது ஜப்பானியர்களின் சங்கதி என்று புரியும் .ஆம், கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகம் அடுத்த தலைமுறை பற்றி கவலைப்பட ஆரம்பித்தது.
இந்த மொபைல் வந்தாலும் வந்தது, இந்த கொரோனாவினால் மொபைல் உபயோகம் அதிகமாகி ஒரே பிரச்சனை என்று பல குடும்பங்கள் இந்தியாவிலும் கூறத் துவங்கியது .
எப்போதும் போன்றே ஜப்பான் முதலில் விழித்துக் கொண்டது .
தங்கள் நாட்டில் தான் அனிமே என்னும் பெயரில் வெப் தொடர்கள் வெளிவந்தன .
உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகள் போன்று ஜப்பானிய குழந்தைகளும், டீன் ஏஜ் பசங்க, பெண்கள் என்று பலர் மணி கணக்கில் மொபைலும் கையும் ஆக பார்க்கத் துவங்கினர் .
மெதுவாக விழித்துக் கொண்ட பெற்றோர்கள் கட்டுப்பாடுகளை அமைக்க குழந்தைகள் ஒரு படி மேலே சென்று நாங்கள் படிக்கிறோம் என்று கூறி அறைக்குள் அடைந்து கிடக்க துவங்கினர் .
பெற்றோர்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று "மொபைலை தொட்ட தெரியும் சேதி " என்று கிடக்கு பிடி போட நாங்கள் ஓய்வாக இருக்கிறோம் என்று மணி கணக்கில் தூங்க துவங்கினர் .
என்ன ? குழந்தைகள் அறையை விட்டு வெளியே வருவதில்லை என்று கவலைப்படுவதும், எப்பாடுபட்டாவது அறையை விட்டு வெளியே கொண்டு வர துடிப்பதும் இன்று அனைத்து வீடுகளிலும் நடக்கும் கதை.
ஜப்பான் நாட்டு மக்கள் முறையிட அரசு விழித்துக் கொண்டு மனநல ஆலோசகர்களை பல இடங்களில் ஏற்பாடு செய்தது.
ஆனால் குழந்தைகள் வர மறுத்தனர்.
ஜப்பானிய அரசு வீடு வீடாக செவிலியர்களை அனுப்பி இதன் தீவிரத்தை உணர்ந்து பல்வேறு வகைகளில் பல்லாயிரக்கணக்கான டீனேஜ் குழந்தைகளை தவறான சிநேகிதம், தீய மனிதர்களின் கட்டுப்பாடு , போதைப் பழக்கம் , குடி பிரச்சனை, பாலியல் பிரச்சனைகள் ஆகியவற்றில் இருந்து அவர்களை வெளியேற்றும் வகைகளை செய்து இன்றளவும் காப்பாற்றி வருகின்றது.
ஜப்பானியர்களுக்கு உரிய வகையில் அறையில் தன்னை அடைத்துக் கொள்ளும் பழக்கத்திற்கு ஹிக்கி கோமாரி என்று பெயரிட்டனர் .
மன அழுத்தம், யாருடனும் பேசாமல் இருப்பது, கோபத்தின் உச்சிக்கு செல்வது, எங்கும் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது, தான் நினைத்ததை செய்வது , அதாவது மொபைல் மொபைல் என்பது மட்டுமே நினைப்பது இதுதான் ஹிக்கி கோமாரியின் அறிகுறி.
இன்று நம் நாட்டில் டீனேஜ் மாணவ மாணவிகளிடம் இப்பிரச்சனை மிக அதிகமாக உள்ளது என்பது பெற்றோர்களின் குறை .
போதைப் பொருள் பிரச்சனைகளும் நாடு முழுவதும் பரவி உள்ளது .
மிக அதிகமான பிரச்சனை என்று ஹிக்கி கோமாரி பரவவில்லை என்றாலும் இந்த நோயின் எதிரொளியாக கொலை, கொள்ளை, தற்கொலைகள் ஆகியவை அதிகரிக்கின்றன .
பெற்றோர்கள் தம் குழந்தைகளின் மிகச்சிறிய வயதிலேயே இதை கண்டுபிடித்து மனநல ஆலோசகரின் உதவி பெற வேண்டும்.
தனிமை தேவைதான் . ஆனால் அளவுக்கு மிஞ்சி அதிகமாகும் போது அது நஞ்சு என்பதை மறந்து விடக்கூடாது .
இந்த ஹிக்கி கோமாரி அனைத்து வயதினரையும் தாக்குகின்றது அல்லது அடிமையாக்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.