கல்லீரலை காப்பது எப்படி ?
இன்று தமிழ்நாட்டில் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டோர் ஏராளம் உள்ளனர்.
மது அருந்துதல், பிராக்டோஸ் எனும் சர்க்கரை கலந்த குளிர் பானங்கள் அருந்துதல் , புகையிலை , அதிக செய்த உணவு பயன்படுத்துவது, பித்தம் மற்றும் வயிற்றுப்புண் நோய்கள் கல்லீரலை பலவீனப்படுத்துகின்றன.
கல்லீரல் மனிதனுக்கு மிகத் தேவையானது.
உணவில் சேரும் நச்சுக்களை முறிக்கும்.
உணவை செரிக்க வைக்கும்.
பித்தநீரை உற்பத்தி செய்கிறது.
புரத வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.
தமிழ்நாட்டில் கல்லீரலுக்கு எதெல்லாம் நோய் தருமோ? அவற்றை ஆண்களும் பெண்களும் தொடர்ந்து செய்வதால் கல்லீரல் கெட்டுப் போய் பல லட்சம் மரணங்கள் தென்னிந்தியாவில் நடக்கின்றன. எனவே இளைஞர்களே, தாய்மார்களே கல்லீரலை காக்க கற்றுக் கொள்ளுங்கள்.
தேவையற்ற மது , புகையை ஒழியுங்கள்.
மணத்தக்காளி, முருங்கை, அகத்தி, கருவேப்பிலை, தேன் கலந்து சாப்பிடுங்கள்.
வெள்ளைப் பூண்டு, காலிபிளவர் மிக நல்லது .
எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி சாறுகளை அதிகம் பருகுங்கள்.
தேங்காய், மோர், சூப், பால், முட்டை சாப்பிட கல்லீரலுக்கு நல்லது .
அதிக புளிப்பு, காரம், மசாலா, கொழுப்பு எண்ணெயில் பொரித்து, நெய் இவற்றை அறவே குறைத்து விடவேண்டும்.
கிரீம்கள் ,பாலாடை, ஐஸ்கிரீம் கூடாது.
பிஸ்தா, பாதாம், முந்திரி, நிலக்கடலை அளவுடன் சாப்பிடலாம் .
கோழி முட்டையின் மஞ்சள் கரு, மாட்டிறைச்சி, இறால் போன்றவை வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.