ஆரோக்கியம் வேண்டுமா? 4000 அடிகள்

ஆரோக்கியம் வேண்டுமா? 

4000 அடிகள் எடுத்து வையுங்கள்.

 1964 ஆம் ஆண்டு ஜப்பானிய நிறுவனம் நாம் போடும் அடிகள் எவ்வளவு என கணக்கிடும் ஸ்டேப் கவுண்டர் என்ற கருவியை கண்டுபிடித்தது.

 அதன் ஸ்டெப் கவுண்டர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தபோது அந்த நிறுவனம் Lets walk 10000 steps A Day என்ற வாசகத்தை வெளியிட்டது.

 அதாவது தினமும் பத்தாயிரம் அடிகள் நடங்க என்பதுதான் அதன் பொருள் ஜிம்முக்கு சென்றால் கலோரி நிறைய எரிந்து விடும் என நினைத்து செல்கின்றனர் ஆனால் அது சரியல்ல.

 நாம் தினமும் பல மணி நேரம் அமர்ந்த நிலையில் இருந்தாலும் அவ்வப்போது எழுந்து நிற்கிறோம்.

 வீட்டில் வேலை செய்வதற்காக சில அடிகள் நடக்கிறோம்.

 அலுவலகத்தில் இருந்தாலும் நாம் நடக்கும் அடிகள் குறைவுதான்.

 நான்தான் உடற்பயிற்சி செய்கிறேன் என்று கூறினாலும் கலோரியை எரிக்க சிறந்த வழி நடை பயிற்சிதான்.

 தினமும் பத்தாயிரம் அடி நடந்தால் அதன் மூலம் 300 முதல் 500 கலோரி எரியும் .

ஆனால் அது முடியாத பட்சத்தில் நான்காயிரம் அடிகள் தினமும் வையுங்கள் இதுவே போதுமானது.

 இதன் மூலம் டாக்டரை நம்மிடம் நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

 காலையில் நடந்தால் உடல் சுறுசுறுப்பு அடையும்.

 உடலின் மேல் படும் சூரிய ஒளி கூடுதல் நன்மை அளிக்கும்.
 அடிகள் எடுத்து வைப்போம் ஆரோக்கியம் காப்போம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை