பிளாஸ்க் பராமரிப்பது எப்படி
எந்த ஒரு பானத்தையும் பிளாஸ்கின் ஊற்றி வைக்கும் முன்பு சமையல் சோடா கலந்த நீர் விட்டு பிரஸ்சால் தேய்த்து கழுவி சுத்தம் செய்து தலைகீழாக 5 நிமிடம் வைத்து உள்ளே உள்ள நீரை படிய விட வேண்டும்.
கரை, துர்நாற்றத்தை போக்க வினிகர் கலந்து கழுவ வேண்டும் .
பிளாஷ்கை கழுவும் போது பைப்புக்கு அடியில் நட்டமாக வைத்து தண்ணீரை அதற்குள் திறந்த விடுவது கூடாது.
பாட்டில்கள் கழுவும் கம்பியுடன் கூடிய பிரஸ்ஸை பயன்படுத்தினால் பிளாக் உடைந்து விடும் .
கழுவியதும் பிளாஷ்கை தலைகீழாக கவிழ்த்தி ஐந்து நிமிடம் வைத்து உள்ளே உள்ள நீரை வடிய விட வேண்டும்.
சுத்தம் செய்யும்போது அதனுள் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வேண்டும்.
பிறகு கார்க்கை போட்டு குழுக்கி விட்டு தண்ணீரை வெளியே ஊற்ற வேண்டும்.
அப்படியே தண்ணீரில் முக்கி எடுத்தால் பிளாஸ் கெட்டுவிடும் .
சூடான பானத்தை ஊற்றும் போது பிளாஸ்கின் கழுத்து வரை நிரப்பாமல் சிறிது இடம் காலியாக விட வேண்டும்.