வெந்நீர் மருத்துவம்
வெதுவெதுப்பான நீரை குடிப்பது உடலின் வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்க செய்து கலோரிகளை எரிப்பதை துரிதப்படுத்தும் .
உணவுக்கு முன் வெதுவெதுப்பான நீரை உட்கொள்வது முழுமையான உணர்வை உருவாக்குகிறது.
அதிக உணவு உட்கொள்ளுதலை குறைக்க உதவுகிறது மற்றும் சூடான நீர் எடை இழப்புக்கு உதவுகிறது.
கூடுதலாக வெதுவெதுப்பான நீர் செரிமானத்துக்கு உதவுகிறது.
வீக்கம் மற்றும் வளர்ச்சிக்கள், எடை குறைப்புக்கான பொதுவான தடைகள் ஆகியவற்றை குறைக்கிறது.
பயன்படுத்தும் முறைகள்
சுக்கு கலந்த வெந்நீரை குடித்து வந்தால் வாயு தொல்லை விலகும்.
விருந்து சாப்பிட்ட பின் வெந்நீர் குடித்தால் எளிதில் செரிமானம் ஆகும்.
அடிக்கடி வெந்நீர் குடித்தால் செரிமானம் இன்மையால் ஏற்படும் தலைவலி நீங்கும்.
வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றி உடம்பில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
வயிற்றுப்புண்ணால் ஏற்படும் வலி குறைய மிதமான சூட்டில் வெந்நீரை சிறிது சிறிதாக குடிக்க வேண்டும்.
சாப்பிடுவதற்கு அரை மணி முன்னால் ஒரு டம்ளர் வெண்ணீர் குடிக்க உடல் எடை குறையும் .
ஒரு தேக்கரண்டி பார்லி வேகவிட்ட வெந்நீரை குடித்தால் சருமம் மிருதுவாகும்.
வெந்நீரில் தேன் கலந்து அருந்த உடல் எடை குறையும்.
தலைவலியால் மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்படும் போது வெந்நீரில் விக்ஸ் அல்லது நொச்சி இலை போட்டு ஆவி பிடிக்க தலைவலி குணமாகும்.
ஒரு தேக்கரண்டி காபித்தூள், ஒரு கிராம்பு, லவங்கப்பட்டை போட்டு கொதிக்க வைத்த இளம் சூடான வெந்நீரை குடிக்க தலைவலி குணமாவதோடு செரிமானமின்மையால் ஏற்படும் நெஞ்செரிச்சல் சரியாகும்.
சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த வெந்நீரை தினமும் அருந்தி வர உடல் ஆரோக்கிய மேம்படும்.
வெந்நீர் குடிப்பது சளிக்கு சிகிச்சை அளிப்பதற்கும், நாசி ஆரோக்கியத்திற்கும் மேம்படுத்துவதற்கும் நன்மை பயக்கும்.
இது வீக்கத்தை குறைக்கிறது.
கட்டிப்பட்ட சளியை கரைத்து வெளியேற்ற உதவுகிறது மற்றும் சைனஸ் அழுத்தத்தை நீக்குகிறது.
ஒரு கப் கொதிக்கும் நீரால் உருவாகும் நீர் ஆவியை உள் எடுப்பது சைனசை அழிக்கவும், சைனஸ் தலைவலியை எளிதாக்கவும் உதவும் .
கூடுதலாக காலையில் வெறும் வயிற்றில் சூடான எலுமிச்சை நீர் அருந்த அலர்ஜி எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.