உணவில் தவிர்க்க முடியாத உப்பு

உணவில் தவிர்க்க முடியாத உப்பு

உணவில் எப்படி காரம் , புளிப்பு போன்ற சுவைகள் முக்கியமோ அதே போல் உப்பு சேர்ப்பதும் முக்கியம் .ஆனால் சேர்க்கப்படும் உப்பு அளவானதாக இருக்க வேண்டும்.

 அதிகமாக அல்லது குறைவாக இருந்தால் நீங்கள் பலவித உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

 எனவே உப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 உணவில் உப்பு என்பது போதுமான அளவு இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் உயிர் வாழலாம்.

 அதிகப்படியான உப்பு சேர்ப்பது உயர் குருதி அழுத்தம், பக்கவாதம் உட்பட மாரடைப்பு போன்ற உயிர் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோய்களை தோற்றுவிக்க கூடும் .

நம் நாட்டு சமையலை பொருத்தவரை உப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆனால் அதிகமான உப்பால் உடம்பில் உப்புச் சத்து அதிகமாகி நீர் தேக்கம் ஏற்பட்டு தைராய்டு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உப்பை பயன்படுத்த வேண்டிய அளவு முறையை அறிந்து கொள்ளுங்கள்.

 இயற்கையாகவே அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு பொருள்களான காய்கறி, பழங்கள், கீரைகள் எல்லாவற்றிலுமே உப்பு வகையில் ஒன்றான சோடியம் குளோரைடு கலந்துள்ளது.

 இது போதாது என்று தோசை மாவு போன்றவற்றில் பேக்கிங் சோடாவை இடுவதால் அதிகளவான உப்பு நம் உடலை வந்தடைகிறது.

 பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான பர்கர் , பீட்சா போன்றவற்றிலும் அதிகளவான உப்பை சேர்க்கின்றனர்.

 இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.

 உப்பு சாதாரண ஒரு சுவை ஊட்டும் பொருள் மட்டும் கிடையாது .ஏனெனில் உப்பில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படும் அல்லது சோடியத்தின் சில அத்தியாவசிய தாதுக்கள் எலெக்ட்ரோலைட்டுகள் போன்றவைகளும் காணப்படுகின்றன.

 நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாளும் உணவுக்காக 5 கிராம் உப்பை பயன்படுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

 கடைகளில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டி உட்பட நாம் ஆசையாக வாங்கி காெறிக்கும் தின் பண்டங்களிலும், உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளிலும் அதிகளவான உப்பு கலந்துள்ளது.

 ஆகையால் அவ்வாறான உணவுகளை கொள்ளளவு செய்யும் போது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
 சிறுவர்கள் , கர்ப்பிணி தாய்மார்கள் ஆகியோரின் ஆரோக்கியம் தொடர்பில் நாம் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை