கோடையில் மறந்தும் கூட செய்யக்கூடாத எட்டு விஷயங்கள்

கோடையில் மறந்தும் கூட செய்யக்கூடாத எட்டு விஷயங்கள் 

1. கோடை காலத்தில் வெளியே வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் போடாமல் அல்லது பாதுகாப்பான ஆடைகளை அணியாமல் சென்று விடாதீர்கள். இல்லாவிட்டால் அது சருமத்தை மோசமாக பாதித்து சரும நிறத்தை கருமையாக்கி விடும்.

 2.  கோடையில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது உடல் வறட்சியை இன்னும் அதிகரித்து வெப்ப வாதத்தின் அபாயத்தை அதிகரித்து விடும்.

 3. அடர் நிறங்களில் ஆடைகள் அல்லது மிகவும் இறுக்கமான ஆடைகளை கோடைகாலத்தில் அணியாதீர்கள். இல்லாவிட்டால் அந்த ஆடைகள் வெப்பத்தை தக்கவைத்து உடல் சூடு பிரச்சனையை அதிகரித்து விடும்.

 4. கோடைகாலத்தில் எங்கு வெளியே சென்றாலும் நீர் கொண்டு செல்ல மறந்து விடாதீர்கள். மற்ற காலங்களை விட கோடையில் அதிகளவு நீரை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் வறட்சியால் அவதிப்பட நேரிடும். தேவைப்பட்டால் பல சாறுகளும் எடுத்துக் கொள்ளலாம்.

 5. வயிறு நிறைய மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால் அது உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு உடலில் வத்தத்தை அதிகரிக்கும்.

6. வெளியே வெயிலில் செல்லும் போது தொப்பி, சன் ஸ்கிரீன், கண்ணாடி போன்றவற்றை அணிய தவறக் கூடாது.

 7. வெயிலில் அதிகம் சுற்றுவது தவிர்க்க வேண்டும். அவசியம் இருந்தால் மட்டும்தான் வெளியே செல்ல வேண்டும். சூரிய கதிர்கள் சருமத்தில் அதிக அளவு படுமானால் அது சரும புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்து விடும்.
 8. வெயிலில் அதிகமாக உள்ளது என்று வீட்டின் ஜன்னல்களை அடைத்துக் கொண்டு இருப்பதை தவிர்த்து விடுங்கள் . இல்லாவிட்டால் அதுவே வீட்டினுள் வெப்பத்தை அதிகரிக்கும் காற்றோட்டமாக இருக்கும் வீடுகளில் வசிப்பது சிறந்தது.

கருத்துரையிடுக

புதியது பழையவை