மழைக்காலத்தில் மின்சாரம் பயன்படுத்துவது எப்படி
தற்போது வாழ்க்கை சூழலில் மின்சாரம் இன்றி எதுவுமே இல்லை என்றாகிவிட்டது.
தினசரி பணிகளை எளிதாக்க மின்சாரம் முக்கிய இடத்தில் உள்ளது.
ஆனால் சரிவர பராமரிக்காமல் இருக்கும்போது பல்வேறு பாதிப்புகளை சந்திக்க வேண்டி உள்ளது.
மழைக்காலங்களில் மின் சாதனங்களை கவனமான முறையில் கையாள வேண்டும்.
இதற்கான வழிமுறைகள் வெறும் கால்களாலும் , ஈரமான கைகளாலும் மின் சாதனங்களை தொடுவதை தவிர்க்கவும்.
பழுதடைந்த உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
உடைந்த பிளக் காரணமாக சார்ட் சர்க்யூட் பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புள்ளது.
உபகரணங்களை துண்டிக்கும் போது பவர் பாயிண்ட்டுகளை அணைக்க மறக்காதீர்கள்.
மைக்ரோவேவ் பயன்படுத்தும்போது அலுமினியம் ஃபாயில் உலோக தகடுகளை உள்ளே வைக்கக் கூடாது.
கிச்சன் அல்லது ஷிங்க் அருகில் உள்ள சுவிட்ச் போர்டுகள் பாத்ரூமில் உள்ள பாத் டப், நீச்சல் குளங்கள் பிற ஈரமான பகுதிகளில் உள்ள சுற்றுகள் நல்ல நிலையில் உள்ளதா என அடிக்கடி சரி பார்க்கவும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுவிட்சுகள் தன்மையை உறுதிப்படுத்த தேவைப்படும் போது மாற்றிக் கொள்ளவும்.
ட்ரிம்மர் ,சேவர், ஹேர் டிரையர், ஹேர் ஸ்ரெயிட்டனிங் போன்றவற்றை பயன்படுத்திய பின்னர் முறையாக அணைக்கப்பட்டுள்ளதா என்ன சரிபார்க்கவும்.
ஹீட்டர் வசதி இல்லாத நிலையில் ஒரு சிலர் கையடக்க மின்சார ஹீட்டர்களை பயன்படுத்தும் போது குழந்தைகளிடம் கவனமாக இருக்க வேண்டும்.
தண்ணீர் சூடாகி விட்டதா என கைவைத்து பார்க்கக் கூடாது.
வீட்டை விட்டு எங்கேயாவது வெளியே செல்லும்போது மறக்காமல் ஹீட்டர்கள், ஏசி அவன் போன்றவற்றின் முக்கிய பிளக் பாயிண்ட் சுற்றுகளை அணைக்கவும்.
வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடிய கணினி மானிட்டர் டிவி போன்றவை இருக்கும் இடத்தில் காற்றோட்டம் இருப்பது சிறப்பானது.