குளிர்ச்சி தரும் செம்பருத்தி

குளிர்ச்சி தரும் செம்பருத்தி
கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும் அற்புதமான மலர் செம்பருத்தி.

 இது மலேசியா நாட்டின் தேசிய மலர்.

 செம்பருத்தி பல வண்ணங்களில் காணப்பட்டாலும் ஐந்து இதழ்கள் கொண்ட ஒற்றை அடுக்கு சிவப்பு நிற செம்பருத்தி பூவே மருத்துவத்திற்கு பயன்படுகிறது.

 செம்பருத்தி இலை, பூ, வெந்தயம், வெட்டிவேர், கருவேப்பிலை போன்றவற்றை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலை முடியில் தடவி வர கூந்தல் செழித்து வளரும்.

 சிறிதளவு செம்பருத்தி பூ மற்றும் இலைகளை எடுத்து 200 மில்லி லிட்டர் தண்ணீரில் காய்ச்சி ஆறியதும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

 அத்துடன் கடலைமாவை சேர்த்து தலைமுடியில் தடவி வந்தால் முடி கருமையாக, பளபளப்பாக இருக்கும்.

 செம்பருத்தி இலைகள் பூ, மொட்டு போன்றவை நீர் சேர்த்து கசாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் எரிச்சல், சிறுநீர் கடுப்பு நீங்கும்.

 செம்பருத்தி பூவுடன் நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி சீரகப்பொடி, பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் இதயம் பலப்படும். ரத்த கொதிப்பு குறையும்.
 செம்பருத்திப்பூ சாருடன் சர்க்கரையும், எலுமிச்சை சாறும் சேர்த்து அருந்த உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை