குரோமா தெரப்பி வண்ண சிகிச்சை

குரோமா தெரப்பி வண்ண சிகிச்சை

குரோமா தெரப்பி வண்ண சிகிச்சை என்று அழைக்கப்படும் குரோமா தெரப்பில் குளியல் அருகில் சவரில் வண்ண விளக்குகளை பொருத்தி இருப்பார்கள் .

சவரில் இருந்து தண்ணீர் விழும்போது வெவ்வேறு வண்ணங்களில் விளக்குகள் ஒளிரும்.

 இது தண்ணீர் பல வண்ணங்களில் ஒளியாக விழுவது போல தோன்றும்.

 நிறங்களுக்கும் நமது எண்ணங்களுக்கும் தொடர்பு உண்டு.

 சில நிறங்கள் பசியை தூண்டும் .

சில நிறங்கள் அமைதியை மற்றும் தளர்வு உணர்வு தரும்.

 சில இந்த தெரப்பி இனிமையான மனநிலையை மேம்படுத்த உதவும்.

 எகிப்தியர்கள் மற்றும் சீனர்களால் இது அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 இருட்டான இடத்தில் சிறியதாக ஊடுருவும் ஒலி மற்றும் வண்ணங்கள் நம்மை உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் புத்துணர்வாக்கும்.

 ஸ்பாவில் தண்ணீர் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள்.

 உடலின் மேல் வட்ட இயக்கத்தில் பொழியும் தண்ணீர் தசைகளின் இறுக்கத்தை தளர்த்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

 சூடான அல்லது குளிர்ந்த தண்ணீரால் செய்யப்படும் மசாஜ் நீண்ட நேரம் ஆசுவாசப்படுத்தும் .

ஸ்பா சிகிச்சியில் பல விதங்கள் உள்ளன.

 இதை மனதை புத்துணர்வாக்கும்.


இயற்கை இறுக்கமான மனநிலையை மாற்ற சிறந்த வழி இயற்கையோடு கலந்திருப்பது செடிகளை பராமரித்தல், செல்லப் பிராணிகளுடன் விளையாடுதல், மரங்கள் அடர்த்திருக்கும் சாலையில் காலாற நடத்தல், பூங்காகளுக்கு செல்லுதல், கடல் அலைகளை ரசித்தல், இயற்கையின் அழகில் கவனம் செலுத்தினால் இதயம் லேசாகும்.

 மனது புத்துணர்வாகும்.

 குழந்தைகள்

சிறு குழந்தைகளுடன் விளையாடுவது அவர்கள் செய்யும் குறும்புகளை ரசிப்பது என்று குடும்பத்தோடு நேரம் செலவழியுங்கள்.

 வெளியூர் பயணத்துக்கு திட்டமிடுங்கள்

 இத்தகைய செயல்கள் மன அழுத்தத்தை நீக்கி புத்துணர்வோடு இருக்கச் செய்யும் .

உறக்கம்

நாம் தினமும் புத்துணர்ச்சியோடு இருக்க ஏழு முதல் எட்டு மணி நேரம் சீரான உறக்கம் தேவை.

 இரவு நீண்ட நேரம் கண் விழித்தால் உடல் மட்டுமல்லாமல், மனநலமும் பாதிக்கப்படும்.

 மனது இறுக்கமாக இருக்கும் நேரங்களில் நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிக்க கூடியதாக இருக்க வேண்டும்.

 மசாலா நிறைந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவு, அதிக அளவிலான உணவு ஆகியவற்றை தவிர்ப்பது சிறந்தது.

நடனம் ஆடுங்கள்

 நடனம் ஆடுவது மன அழுத்தத்தை போக்கி மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன .

இதற்கு நீங்கள் முறைப்படி நடனம் கற்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 தற்போது எல்லா இடங்களிலும் நடன வகுப்புகள் இருக்கின்றன.

 அதில் சேர்ந்து நடனம் ஆடலாம்.

 பலருடன் சேர்ந்து நடனம் ஆடும் போது கூச்ச உணர்வு தயக்கம் நீங்கும்.

 வீட்டிலேயே நடனமாட நினைப்பவர்கள் அதற்கு தகுந்த இடத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
 நடனம் ஆடுவதற்கு பொருத்தமான உடைகளை அணிந்து உங்களுக்கு பிடித்த பாடலை பாடிய படியோ அல்லது ஒலிக்கவிட்ட படியோ மெதுவாக உங்களுக்கு தெரிந்த நடன அசைவுகளை பின்பற்றி ஆடுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை