காட்டேரி பூங்கா

காட்டேரி பூங்கா 
நீலகிரியின் அழகை பருகச் செல்லும் வழியில் மிக அற்புதமான சொர்க்கமாக திகழ்கிறது குன்னூர் காட்டேரி பூங்கா.

 மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட பாதையில் பெரும்பாலமானவர்களுக்கு பரிச்சியம் இல்லாதது காட்டேரி பூங்கா.

 உதகை மலைப்பாதையில் பரலியாறுக்கும், குன்னூருக்கும் இடையில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது.

 குன்னூரில் நகர நெரிசல்களில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் 5.5 ஏக்கர் பரப்பளவில் பறந்து விரிந்து உள்ளது காட்டேரி பூங்கா.

 சுற்றுலா பயணிகள் வண்ண கனவுகளுடன் எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் தங்கள் வாழ்வை புதிதாக துவங்கும் புதுமண தம்பதிகள் இங்கு வந்து புகைப்படங்களாக எடுத்து தள்ளி தங்கள் நினைவை என்றும் இனிமையாக பதிவு செய்து கொள்கின்றனர்.

 உதகை மலை ரயில் பாதையில் ரண்ணிமேடு நிறுத்தம் அருகே அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளின் வருகைக்காக காத்திருக்கிறது.

 பூங்காவுக்கு இடையில் ரன்னிமேடு ரயில் நிறுத்தம் அருகே குகைக்குள் செல்கிறது மலை ரயில்.

 இதில் பயணிப்போருக்கு மறக்க முடியாத பயணமாக இருக்கும்.

 கண்ணை கவரும் பல வண்ண மலர்கள், பச்சை கம்பளம் விரித்தார் போன்ற பசுமையான புல்வெளிகள், நகரத்தின் சந்தடியில் சாக்கடை கழிவுகளையே பார்த்து பழகிப்போன இவர்களுக்கு கழிவுகள் இல்லாமல் சுத்தமான தண்ணீர் செல்லும் ஓடைகள், மனதுக்கு இதமான ஓடைகளின் சத்தம், எங்கு பார்த்தாலும் பசுமையை தெரியும் தேயிலை தோட்டங்கள் என இயற்கையழகு இப்பகுதியில் கொட்டி கிடக்கிறது.

 உயர்ந்த இடத்தில் காத்திருக்கும் நீல வானம் அதோ அதனோடு போட்டி போட்டு மறைக்கும் பசுமையான உயர்ந்த மலைகள் இவற்றுக்கு இடையில் காதலனை அவசரமாக பார்க்கச் செல்வது போல விரைந்து ஓடும் மேகக் கூட்டங்கள் இவை இங்கு கண்கொள்ளா காட்சிகள்.

 மழைக்காலங்களில் முகவரியை தொலைத்தவர்கள் போல அலையும் முகிலினங்கள் பார்க்க வருவோர் அதிகம் பூங்காவின் நடுவில் பலர் இளைப்பாற அழகிய கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன .

மிக தூய்மையாக பராமரிக்கப்படும் காட்டேரி பூங்காவில் நம்மை வரவேற்க இயற்கை அன்னையின் தவப்புதல்வர்களான மந்திகளுக்கும் பஞ்சமில்லை .

அவற்றின் சுட்டித்தனமும் அனைவரையும் கவரும்.
உதகை மலைப்பாதை துவங்கும் கல்லாற்றில் பல பண்ணையை பார்த்தவாறு தொடங்கும் இப்பயணத்தில் அதிகம் அறியப்படாத குன்னூர் காட்டேரி பூங்காவை பார்க்க கிளம்பி விட்டீர்களா?

கருத்துரையிடுக

புதியது பழையவை