மன ஆரோக்கியத்துக்கு உதவும் அராேமா தெரப்பி
நல்ல வாசனையை நுகரும்போது இயல்பாகவே மனதில் மகிழ்ச்சியும் அமைதி நிலையும் உண்டாகும் .
மூக்கில் உள்ள சிலியா என்ற மெல்லிய முடிகள் தான் இந்த வாசனையை முகர்ந்து மூளையில் உள்ள லிம்பிக் சிஸ்டத்துக்கு கொண்டு செல்லும்.
அந்த வாசனை என் தன்மைக்கு ஏற்றபடி மனதும் உடலும் செயல்படும்.
உதாரணமாக பூக்களின் வாசனையை நுகரும்போது தன்னிச்சையாக புன்னகைப்பது, காரசாரமான மசாலா பொருட்களின் வாசனையை நுகரும்போது தும்மல், எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகள் வெளிப்படுவதை சொல்லலாம் .
அந்த வகையில் இயற்கை நறுமண எண்ணைகள் கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறைக்கு அரோமா தெரப்பி என்று பெயர்.
பெரும்பாலும் இதில் லாவண்டர், டீ ட்ரீ , லெமன் ,பெப்பர்மென்ட் ஆகிய எண்ணெய்கள் பயன்படுகிறது.
மல்லிகை, ரோஜா, லவங்கப்பட்டை, சந்தனம், ஆரஞ்சு ,இஞ்சி, பாதாம் போன்றவற்றிலிருந்தும் அரோமா எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றில் ஏதேனும் ஒரு எண்ணையை நான்கு சொட்டுகள் எடுத்து சிறிது நீரில் கலந்து அதிலிருந்து வெளிவரும் வாசனையை தொடர்ந்து ஒரு மணி நேரம் வரை நுகர வேண்டும். இதுவே அரோமா சிகிச்சை முறை.
இதன் மூலம் மன ஆரோக்கியம் மேம்படும்.
இந்த வாசனை எண்ணெய்கள் பூக்கள், இலை, காய், கனி விதை, பட்டை, பிசின் வேர் என தாவரங்களின் அனைத்து பாகங்களிலிருந்தும் பிரித்தெடுக்கப்படும் திரவங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
வாசனை எண்ணெய்களுக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.
அல்லது உடலில் வலி உள்ள இடங்களில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.
இசையை கேட்டபடியே, புத்தகம் படித்தவாறு, யோகா தியானம் போன்ற உடற்பயிற்சிகள் ஈடுபடும் போதும் இந்த தெரப்பியை மேற்கொள்ளலாம்.
இந்த எண்ணையை ஆவியாக்கி புகை மூட்டலாம்.
இந்த புகை பரவும் இடத்தில் உள்ள கிருமிகள் நீங்கும்.
உடனடி புத்துணர்வு தரும்.
பதற்றத்தை குறித்து மன அமைதிக்கு வழிவகுக்கும் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி உடல் முழுவதும் சீரான ரத்தம் பரவு உதவும்.
மூளையின் செயல்பாட்டையும், நினைவாற்றலையும் மேம்படுத்தும்.
வயிற்றுப் பிடிப்புகள், தலைவலி, கழுத்து வலி, முழங்கால் வலி மற்றும் முதுகு வலி போன்ற உடல் வலிகளை குறைக்கும் நல்ல தூக்கத்துக்கு வழிவகுக்கும் .
தூக்கம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் லாவண்டர் எண்ணெயையும், சருமப் பிரச்சனைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் டீ ட்ரீ ஆயிலையும், அடிக்கடி மனமாற்றம் அல்லது நிலையற்ற உணர்ச்சி வெளிப்பாடு இருப்பவர்கள் மல்லிகை பூ எண்ணெயையும், மறதி மற்றும் தலைமுடி பிரச்சினை உள்ளவர்கள் லவங்கப்பட்டை எண்ணெயையும் பயன்படுத்தலாம்.