டென்ஷனின்றி சுலபமாக வீடு மாற்றலாம்

டென்ஷனின்றி சுலபமாக வீடு மாற்றலாம் 
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பல்வேறு காரணங்களால் மற்றொரு வீட்டுக்கு குடிப்பெயரும் போது முதலில் யோசிப்பது பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான்.

 எந்தவித பதற்றமும் இல்லாமல் சுலபமாக வீடு மாற்றுவதற்கான எளிய வழிகள் இதோ:

 முன்னரே திட்டமிடல் 

பொருட்களை பேக் செய்ய ஆரம்பிக்கும் முன்பு புது வீட்டின் இடவசதி எப்படி உள்ளது என்பதை சரியாக கணக்கிட வேண்டும்.

 அப்போதுதான் பழைய வீட்டில் உள்ள பொருட்களை புது வீட்டில் எப்படி ஒழுங்குபடுத்தலாம் என்று திட்டமிட முடியும் .

தற்போது இருக்கும் வீட்டை முழுமையாக பார்வையிட்டு தேவையில்லாமல் வைத்திருக்கும் பொருட்களை சரியான முறையில் அகற்றி விட்டால் தேவையான பொருட்களை மட்டும் புதிய வீட்டுக்கு கொண்டு செல்ல முடியும்.

 நகைகள், ஆவணங்கள் மற்றும் இதர முக்கிய பொருட்களை முதலில் பாதுகாப்பாக பேக் செய்து கொள்ள வேண்டும்.

 நேரம் ஒதுக்குங்கள் 

வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களையும் ஒரே நாளில் பேக் செய்ய முயற்சிப்பதை விட தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செலவிட்டு வீட்டை ஒழுங்குபடுத்தலாம் .

இதனால் ஒவ்வொரு பொருளையும் கவனித்து பழைய மற்றும் தேவையில்லாதவற்றை எளிதில் அகற்ற முடியும்.

 பட்டியலிடுங்கள்

பொருட்களை அட்டைப் பெட்டிகளில் பேக் செய்வது, தூக்கிச் செல்வதற்கு எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

 ஒவ்வொரு அட்டை பெட்டிக்கும் எண்கள் கொடுத்து அவற்றில் இருக்கும் பொருட்களை குறித்து வைக்க வேண்டும்.

 இந்த விபரங்களை தனிப்பட்டியலாக தயாரித்து வைப்பது நல்லது.

 இதனால் புதிய வீட்டுக்கு மாறியவுடன் தேவைப்படும் பொருட்களை சுலபமாக எடுத்துக் கொள்ள முடியும் .

தரம் பிரியுங்கள் 

பொருட்களை பேக்கிங் செய்யும் போது கையில் கிடைப்பவற்றை அப்படியே எடுத்து வைக்காமல் ஒவ்வொரு அறையிலும் இருக்க வேண்டியவைகளை தரம் பிடித்து அடுக்கி வைக்க வேண்டும்.

 சமையல் பொருட்கள் அலமாரியில் அடுக்க வேண்டிய பொருட்கள் என தனித்தனியாக பிரித்து பெட்டியில் பேக் செய்து குறிப்பு எழுதி வைத்தால் எளிதாக பிரித்து ஒழுங்குபடுத்த முடியும்.

 இது போன்ற செய்தால் எதையும் தேட வேண்டிய அவசியம் இருக்காது .

வீடு மாறும் நாளில் கவனிக்க வேண்டியவை 

முக்கியமாக எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை உங்களது கண்காணிப்பில் கொண்டு செல்ல வேண்டும்.
 பேக்கிங் செய்த பெட்டிகள் அனைத்தும் சரியாக வண்டியில் ஏற்றப்பட்டுள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை