சிவப்பான இதழிலே.....


சிவந்த இதழ்களுக்கு சீக்ரெட் லிப் பாம்

 தேவையானவை 
தேன் மெழுகு இரண்டு ஸ்பூன்

தேங்காய் அல்லது பாதாம் எண்ணெய் சில துளிகள்

 புதினா எண்ணை ஒரு துளி

 ஜெல்லி இரண்டு ஸ்பூன்

 மாதுளை அல்லது பீட்ரூட் சாறு ஒரு டீஸ்பூன்

 செய்முறை
 1.முதலில் தேன் மெழுகு மற்றும் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை சேர்த்து உருகும் அளவிற்கு சூடு படுத்துங்கள்.

2. பின்னர் நன்றாக கலக்கி இதில் புதினா எண்ணை ஒரு சொட்டு விடவும்.

3. அதன் பின் மாதுளை அல்லது பீட்ரூட் சாரினை கலந்து அவற்றை ஒரு டப்பியில் போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள்.
4.இதனை உடனடியாக ஃப்ரிட்ஜரில் வைக்கவும்.

5.இரண்டு மணி நேரம் கழித்து உபயோகப்படுத்தலாம்.

6. தேவைப்படும்போது உபயோகித்து மீண்டும் குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டால் நிறைய நாட்களுக்கு வரும்

7. தினமும் உபயோகித்தால் உங்கள் உதட்டின் கருமை மாறி அழகு பெறும்

கருத்துரையிடுக

புதியது பழையவை