கருஞ்சீரகத்தின் நன்மைகள்
நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.
இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால் கெட்ட கொழுப்பு குறைய உதவும்.
மேலும் அமினோ அமிலங்கள் வைட்டமின்கள் கால்சியம் இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படும்.
கருஞ்சீரகம் வீக்கம் தணிக்க உதவும்.
கருஞ்சீரகத்தை வெந்நீர் விட்டு அரைத்து தலைவலிக்கும், மூட்டு வீக்கத்துக்கும் மேல் பூச்சாக பூசி வந்தால் சரியாகும்.
கருஞ்சீரகப் பொடியை ஒரு கிராம் எடுத்து மோருடன் கலந்து தொடர்ந்து குடித்து வர விடாமல் வரும் விக்கல் பிரச்சனை குணமாகும்.
ஒரு கிராம் பொடியுடன் நீராகாரம் சேர்த்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் வெளியேறும்.
சளி இருமலை போக்கக்கூடியது.
தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
மாதவிலக்கு பிரச்சனையை தீர்க்கவல்லதும் கருஞ்சீரகம்.