தேவையான பொருட்கள்
=>வேக வைத்த முட்டை ஐந்து
=>பச்சை மிளகாய் இரண்டு
=>கருவேப்பிலை 5 கிராம்
=>சிவப்பு மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
=>மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
=>சீரகப்பொடி அரை டீஸ்பூன்
=>கொத்தமல்லி தூள் ஒரு டீஸ்பூன்
=>கரம் மசாலாத்தூள் கால் டீஸ்பூன்
=>உப்பு சுவைக்கு ஏற்ப
=>எண்ணை தேவைக்கு ஏற்ப
செய்யும் முறை:
முட்டையை வேக வைத்து ஓட்டை நீக்கி மஞ்சள் கருவை விட்டு முட்டையின் வெள்ளை கருவை சிறிய துண்டுகளாக நிற்கவும்.
ஒரு கடாயில் எண்ணை சேர்த்து சூடானதும்,கருவேப்பிலை, பச்சை மிளகாய், சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
அதில் மிளகுத்தூள், சீரகத்தூள், சிவப்பு மிளகாய் தூள், கரம் மசாலா, தூள்கொத்தமல்லி தூள் சேர்க்கவும்.
மசாலாவை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து மசாலாவுடன் கலக்கவும்.
பின்னர் மசாலாவுடன் முட்டையின் மஞ்சள் கருவை உடையாமல் முழுமையாக சேர்க்கவும்.
குறைந்த தீயில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வதக்கவும்.
இப்பொழுது கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து சாப்பிட தயார்.