💢மனைவி என்றால் அன்பின்இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்?
💢பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும் அன்பு தேவதைகள்?
💢ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க
மத்தளம்
💢பெண் என்கிற கிரீடம் அழகு தான் என்றாலும் அவளை வெளியில் உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்?
💢கணவர்கள் கொஞ்சம் கை கொடுங்கள். உங்களுக்காக வாழ்ந்துகொண்டு இருக்கும் அந்த அன்பு பறவையை அரவணைத்து வைத்து கொள்ளுங்கள்
💢அன்பாகப் பேசுங்கள் சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்
💢மனைவிக்கு கை வலியோ, உடல் வலியோ, மனசு வலியோ புரிந்து கொள்ளுங்கள்
💢உங்கள் மகளை கவனிப்பது போல் உங்கள் மனைவியையும் கவனித்து கொள்ளுங்கள்?
💢உடல் மனசு இரண்டையும் மென்மை படுத்துங்கள்?
💢சமையலை பாராட்டுங்கள் அவள் சமையல் அறையில் பட்டிருக்கும் வெப்பம் தொட்ட தழும்பைப் பாருங்கள். அவை உங்களுக்காக அவள் பட்ட அன்பின் சின்னம்.
💢அவள் செய்வது சமையல் அல்ல. அன்பின் அழகு. தினசரி நன்றி சொல்லுங்கள்
💢குறுந்தகவல்களை மனைவிக்கும் அனுப்பலாமே
💢அவள் குடும்பத்திற்காக எரியும் இன்னொரு மெழுகுவர்த்தி. வாழ்க்கை முழுதும் கூட வரும் அன்பு தேவதை?
💢கடவுள் நம்முடன் இருக்கமுடியாது என்பதற்காக கடவுள் கொடுத்த வரம் அன்னையும் மனைவியும்?
💢அவள் கண்களில் கண்ணீர் வராமல் பார்த்து கொள்ளுங்கள். மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். பெண் கண்ணீர் விட்டால் அங்கே செல்வம் தங்காது. புரிந்து கொள்ளுங்கள்.
💢வாழ்க்கையை நீங்களும் அழகாய் வாழலாம்.