தங்க நகைகள் புதிது போல ஜொலிக்கணுமா?

தங்க நகைகள் புதிது போல ஜொலிக்கணுமா?
 தங்க நகைகள் பெண்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை.

 பெண்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப தங்கள் நகைகளை அணிந்து மகிழ்வார்கள்..

பெருமிதமாய் உணர்வார்கள்.

 ஆனால் புதிதாய் வாங்கும் போது தங்க நகைகளுக்கு இருக்கும் பொலிவு பின்னர் குன்றிவிடும் .

தங்க நகைகள் எப்போதும் புதிது போல ஜொலிக்கணுமா? அப்படி என்றால் இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்:

 தங்க நகைகளை அவ்வப்போது பல் துலக்கும் பற்பசை கொண்டு சுத்தப்படுத்தலாம் .

இளஞ்சூடான தண்ணீரில் குளிக்கும் சோப்பு சிறிது,  துணி சோப்பு , சமையல் பாத்திரங்களை துலக்க பயன்படுத்தும் திரவம் ஆகியவற்றை கலந்து சோப்பு கரைசலை உருவாக்கவும் .

அதில் தங்க நகைகளை 15 முதல் 20 நிமிடங்கள் ஊர விடுங்கள் பின்னர் அதை எடுத்து சாதாரணமான தண்ணீரில் கழுவி சுத்தமான துணியால் துடைத்து காற்றோட்டமான இடத்தில் உலர்த்துங்கள்.

அழுக்கு படிந்த தங்க நகையை சுத்தப்படுத்த டூத் பிரஸ் அல்லது சின்ன பிரசி பயன்படுத்தலாம்.

 ஆனால் அழுத்தி தேய்க்க கூடாது.

 தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கு கொதிக்கும் தண்ணீரையோ ஃப்ரிட்ஜில் வைத்திருக்கும் குளிர்ந்த நீரையோ பயன்படுத்தக் கூடாது.

 தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கென்றே இருக்கும் பசையை போன்றவற்றை வாங்கி பயன்படுத்தலாம் .

விலை உயர்ந்த கற்களை பதிக்கப்பட்ட நகைகளை அதிக நேரம் ஊற வைத்து பிரஷ் கொண்டு தேய்க்க கூடாது.

 அது கற்களின் ஜொலிக்கும் திறனை பாதிக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை