உடல் எடையை குறைக்கும் டயட் உணவுகள்
நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்து மிக்க உணவை உண்ணுதல் , உடற்பயிற்சி மற்றும் மது புகைப்பிடிப்பதை தவிர்த்தல் ஆகிய மூன்றையும் கடைபிடிக்க வேண்டும்.
உடல் எடை அதிகரிப்பு இன்று மிகவும் சாதாரணமான பொதுவான விஷயமாக மாறிவிட்டது.
ஆனால் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தம்மிக்க உணவை உண்ணுதல், உடற்பயிற்சி மற்றும் அது புகை பிடிப்பதை தவிர்த்தல் இந்த மூன்றையும் கடைப்பிடித்தாலே போதுமானது .
அதில் ஊட்டச்சத்து மிக்க உணவை அளவோடு எடுத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
உடல் எடையை சரியாக நிர்வகிக்க உடற்பயிற்சி செய்தாலும் உண்ணும் உணவில் புரதம் அதிகம் இருக்க வேண்டும் .
உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைக்க கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
உணவை பொருத்தவரை இன்று உடல் எடையை குறைக்க உடல் பருமன் கொண்டவர்கள் டயட்டில் இருக்க பலரும் முயற்சி செய்கிறார்கள்.
அந்த வகையில் உடல் எடையை குறைக்க சில உணவுகளை பரிந்துரைக்கின்றனர்.
அனைத்து வகையான கீரைகள், முட்டை, கறி, மத்தி, நெத்திலி மற்றும் சால்மன் மீன், சிக்கன், காலிபிளவர், முட்டைக்கோஸ், தக்காளி, புரக்கோலி, பீன்ஸ், கிரீன் டீ, பிளாக் டீ , மூலிகை டீ, டார்க் சாக்லேட் , பருப்பு, பயிறு வகைகள், நட்ஸ் வகைகள், கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து புரதம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள் பொறித்த மற்றும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.