பெண்களை பாதிக்கும் முதுகு தண்டுவட பிரச்சனைகள்

பெண்களை பாதிக்கும் முதுகு தண்டுவட பிரச்சனைகள்


 முதுகு, எலும்புகள், தசைகள் வட்டுக்கள் மற்றும் தசை நாறுகள் ஆகியவற்றின் கூட்டமைப்பை கொண்டது .

முதுகு தண்டுவடம் உடலின் சீரான இயக்கத்திற்கு உதவுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது .

முதுகு தண்டுவட பிரச்சினைகள் பெண்களே அதிகம் பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அல்லது வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, சரியான தோரணையில் உட்காராமல் இருப்பது, அதிக கனமான பொருட்களை தூக்குவது, திடீர் இயக்கம், தும்பல், இரும்பல், உடலை முறுக்குதல், நீண்ட நேரம் நிற்பது, இடைவெளி இன்றி நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது , கழுத்து முன்னோக்கி இருக்கும்படி உட்காருவது, தொடர் தூக்கம், செய்யும் வேலையின் தன்மை மற்றும் வாழ்க்கை முறையினால் கூட முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு வலி ஏற்படலாம்.

 இது தவிர தசை பிடிப்பு, குடல் இறக்கம் , தசை இறுக்கம், இடுப்பு, மூட்டு வலி, எலும்பு முறிவு அல்லது காயங்கள் தசைநார் இறுக்கம் போன்றவற்றாலும் வலி ஏற்படலாம்.

 சரியான நேரத்துக்கு உணவு சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவது என சத்துக் குறைபாட்டாலும் முதுகு வலி உண்டாகும் .

குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் குழந்தை பேரின் போது ஏற்படும் ஹார்மோன் கோளாறு மற்றும் உடல் மாற்றங்களாலும் முதுகுத்தண்டில் வெளிவரலாம்.

 சிங்கிள் எனப்படும் வைரஸ் தொற்றினால் உண்டாகும் தோல் நோய், புற்றுநோய் கட்டிகள், முதுகு தண்டின் கீழ்புறம் சேதம் ஏற்படுவது, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொற்று, இடுப்பு, அலர்ஜி நோய், காய்ச்சல், முதுகெலும்பு தொற்று ஆகியவையும் முதுகு வலிக்கு காரணமாகும் .

எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் , எம் ஆர் ஐ , ரத்த பரிசோதனை, நரம்பியல் சோதனைகள் மூலம் முதுகுத்தண்டு பிரச்சனையில் தீவிரத்தை கண்டறிய முடியும் .

90 சதவீதம் முதுகு தண்டுவட பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும்.

 வலியை குறைக்கும் சூழ்ச்சிகள் :

 தடுப்பு முறைகளை கண்டுபிடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

 உடற்பயிற்சிகள் உடலின் சமநிலையை பராமரித்தல் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் முதுகு வலி வருவதை தடுக்கலாம் .

ஏரோபிக் பயிற்சிகள், யோகா நீச்சல் நடைபெற்று போன்றவற்றை தினசரி செய்வது.

 முதுகுப் பகுதியில் உள்ள தசைகள் சிறப்பாக செயல்பட உதவும்.

 தினசரி காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும்.

 இது அன்றைய நாளின் தொடக்கத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் .

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகள் ஏற்படாமல் காக்கும் .
உடல் பருமன் மற்றும் அதிக எடையும் முதுகு வலிக்கான முக்கிய காரணமாகும் .எனவே உடல் எடையை கட்டுக்குள் வைப்பது சிறந்தது அவசியம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை