உடல் உஷ்ணத்தை குறைக்கும் மங்குஸ்தான்

உடல் உஷ்ணத்தை குறைக்கும் மங்குஸ்தான்

மங்குஸ்தான் பழம் பல ஊட்டச்சத்துகளையும் மருத்துவ குணங்களையும் கொண்டது.

 இதிலுள்ள வைட்டமின் சி சத்தானது உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது.

 ஒமேகா அமிலங்களும் இதில் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி உண்டு .

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுப் பிரச்சனையை குறைத்து செரிமான சக்தியை அதிகரிக்கும்.

 மங்குஸ்தான் பழ ஜூஸ் சாப்பிட்டு வர உஷ்ணத்தால் ஏற்படும் மூலப் பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்.

 இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

 இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் நாக்கு வறண்டு போவதை தடுக்கும்.

 கார்போஹைட்ரேட், புரதச்சத்துக்கள் உடல் ஆற்றலை அதிகரித்து சீரான வளர்ச்சி பெற இப்பழம் முக்கிய பங்காற்றுகிறது .

மங்குஸ்தான் பழம் ஆஸ்துமா, நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்.

 கண் ஆரோக்கியத்திற்கும், கை, கால் நகங்கள், தோல், தலைமுடி பளபளப்புடன் இருக்க உதவுகிறது.

 இரும்பு சத்துக்கள் எலும்பு மண்டல வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.

 இப்பழத்தை தினமும் சாப்பிட புற்றுநோய், காச நோயை அதிகரிக்கும் கிருமிகளை கொல்லும் அபூர்வ சக்தி நிறைந்துள்ளது.

 உணவு குழாயில் இருக்கும் கிருமிகளை கொல்லும்.

 சிறுநீர் நன்கு வெளியேறக் கூடிய சக்தி இப்பழத்தில் உள்ளது.

இப்பழம் சாப்பிட கண்களின் வறட்சி நீங்கி கண் எரிச்சல் நீங்கும் .

உடல் பருமன் குறையும்.

 தோல் சுருக்கங்கள் நீங்கி பளபளப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும்.

 இதன் மேற்புறம் முள்ளும் முள்ளாகவும் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடனும் இருக்கும்.

 மங்குஸ்தானின் மற்றொரு பெயர் ரம்பூட்டான் பழம்.
 மலைப்பிரதேசங்களில் ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை