பர்னிச்சர் பராமரிப்புக்கு ஏழு டிப்ஸ்

பர்னிச்சர் பராமரிப்புக்கு ஏழு டிப்ஸ்

 வீடு முழுக்க பொருட்களை அடைத்து வைக்காதீர்கள் .

அப்புறம் உங்களுக்கு புழங்குவதற்கு இடமே இருக்காது .

பிடித்தமான, அவசியமான ஃபர்னிச்சர்களை மட்டுமே வாங்குங்கள் .

நண்பர்கள் ,உறவினர்கள், வீடுகளில் இருக்கும் பொருட்களை பார்த்து அதே போல வாங்க வேண்டும் என்று எண்ணாதீர்கள் .

உங்கள் வீட்டுக்கு எது பொருத்தம், உங்கள் தேவை, என்ன? எது வசதி? என்பதை உணர்ந்து முடிவெடுங்கள்.

 தேவையில்லாமல் எதையும் வாங்காதீர்கள் .

வீட்டில் நல்ல நிலையில் ஒரு சோபா இருக்கும்போது தள்ளுபடியில் கிடைக்கிறதே என இன்னொரு வாங்குவது அபத்தம்.

 பர்னிச்சர்களை வீட்டில் எங்கே வைக்கப் போகிறோமோ? அந்த இடத்தை அளந்து கொள்ளுங்கள்.

 அதன் பிறகு போய் வாங்குங்கள்.

 கால் மற்றும் படுக்கை அறைகளில் அறுபது சதவீதத்துக்கு மேற்பட்ட தரை பரப்பை பர்னிச்சர்கள் ஆக்கிரமிக்க கூடாது.

 அப்படி இருந்தால் வீட்டுக்குள் இயல்பாக நடமாட முடியாது .

இப்போது மடித்து வைக்கும் வசதி கொண்ட ஃபர்னிச்சர்கள் நிறைந்து வந்துவிட்டன .

அவை இடத்தை மிச்சப்படுத்தும் என்பதால் சிறிய வீடுகளை வைத்திருப்பவர்கள் இப்படிப்பட்ட பர்னிச்சர்களை வாங்கலாம்.

 தினம் தினம் பார்த்து பழகி விட்டதால் உங்கள் வீட்டில் பொருட்களை அலங்கோலமாக குவிந்து கிடக்கின்றனவா ?என்பது உங்கள் பார்வையில் படாது .
அதனால் புதிய கண்களால் வீட்டை பாருங்கள் சுத்தம் செய்து அடுக்கி வையுங்கள்.

கருத்துரையிடுக

புதியது பழையவை