ஆவி இப்படி பிடிக்கலாமா?

ஆவி பிடிக்கலாமா?

 பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகின்ற முதல் பிரச்சனை சர்ம வறட்சிதான்.  

அந்த சரும வறட்சியை போக்குவதற்கான மிகச் சிறந்த தீர்வாக மஞ்சள் இருக்கிறது.

 இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது.

 பொதுவாக மஞ்சள், குழந்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்து அரைத்தோ முகத்துக்கு பூசினால் அழகு கூடும் என்பது நமக்கு தெரியும்.

 நம்முடைய முன்னோர்கள் நம்மை போன்று ஆயிரக்கணக்கான கிரீம்களை எல்லாம் அந்த காலத்தில் பயன்படுத்தவில்லை.

 அவர்களுக்கு இருந்த ஒரே பியூட்டி கிரீம் மஞ்சள் மட்டுமே.

 மஞ்சள் ஆவி பிடித்தல்

3 கப் அளவுக்கு தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க வையுங்கள் .

அப்படி கொதிக்கும் தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ச் அளவுக்கு எடுத்து அரைத்து அதில் கலந்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.

 அப்படி கொதிக்கின்ற தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடிக்க வேண்டும்.

 சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.

 எல்லா சீசன்களிலும் பசு மஞ்சள் கிடைக்காது .

எனவே மஞ்சள் கிழங்கு பசுமையாக கிடைக்கும் காலங்களில் இதனை செய்யலாம்.

 பொதுவாக பொங்கல் நேரத்தில் மஞ்சள் செடி அனைவரும் வாங்குவர்.

 அதில் இருக்கும் மஞ்சள் கிழங்கை சேகரித்து வைத்துக் கொண்டு அதில் இவ்வாறு செய்யலாம்.

 மற்ற சமயங்களில் கஸ்தூரி மஞ்சள் கிழங்கு கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

 எலுமிச்சை 

ஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச்சிறந்த பொருள் .

பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது அதன் நூல் மஞ்சளுடன் சிறிதளவு எலுமிச்சை இலைகளை போட்டால் ஜலதோஷம் தலையில் நீர் கோர்த்து போன்ற பிரச்சனைகள் கூட குணமாகிவிடும்.

எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் எலுமிச்சை பழத்தை சாறு எடுத்து தோல்களை தூக்கி கீழே போட்டு விடாமல் அதை பத்திரப்படுத்தி வைத்து அந்த தோள்களை கூட தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்து பயன்படுத்தலாம்.

 ஆவி பிடித்த பின் செய்ய வேண்டியவை 

பொதுவாக ஆவி பிடித்த பின்னால் நாம் அப்படியே டவலில் துடைத்துக் கொண்டு அடுத்த வேலையை பார்க்க கிளம்பி விடுகிறோம்.

 ஆனால் அப்படி செய்யக்கூடாது.

 ஆவி பிடித்து முடித்த பின்பு துண்டால் துடைத்துக் கொண்டு பின் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாக தேய்க்க வேண்டும்.

 இதன் மூலம் ஆவி பிடித்த பின்னர் முகத்தில் உள்ள சரும துவாரங்கள் விரிவடையாமல் இருக்கும்.
 அதன் பின் ஏதாவது ஒரு பேஸ் பேக் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விட முகம் பொன் போன்ற ஜொலிக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை