பல்வேறு நாடுகளில் வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்

வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்கள் 

புத்தாண்டின் தொடக்கத்தை உலகம் முழுவதும் பல்வேறு விதங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர்.

 ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் தங்கள் மரபு படி புத்தாண்டை வரவேற்கின்றனர் .

அந்த வகையில் சில வித்தியாசமான புத்தாண்டு கொண்டாட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

 அமெரிக்கா

டைம்ஸ் சதுக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று நள்ளிரவில் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய அளவு பந்தை உயரமான கம்பத்திலிருந்து கீழே விழச் செய்வார்கள்.

 1907ஆம் ஆண்டு இறுதியில் 1908 ஆம் ஆண்டு வரவேற்கும் வகையில் நியூ ஹார்ட் டைம்ஸ் உரிமையாளர் அடால்ப் ஓக்ஸ் என் நிகழ்வை உருவாக்கினார்.

 அதன் பின்னர் ஆண்டுதோறும் இந்த நிகழ்வை மக்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

 பிரேசில் 

கோடை காலத்தில் புத்தாண்டு பிறப்பதால் பெரும்பாலும் மக்கள் கடற்கரையில் கொண்டாடுவார்கள்.

 நள்ளிரவுக்கு பிறகு வெள்ளை ஆடைகளை அணிந்து கடற்கரையில் நின்று ஏழு அலைகளைக் கடந்தால் நினைத்தது நடக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

 புத்தாண்டு தினத்தில் தண்ணீர் தெய்வமான யெமஞ்சா விற்கு மரியாதை செலுத்துவது அவர்களின் பாரம்பரியம் .

பிரான்ஸ்

ஷாம்பெயன் ஒயின் விருந்துடன் ஆரம்பிக்கிறது பிரான்ஸ் நாட்டினரின் புத்தாண்டு கொண்டாட்டம்.

 பான் கேக், வான்கோழி கறி போன்ற பாரம்பரிய உணவுகள் இந்த விருந்தில் பரிமாற்றப்படும்.

 புத்தாண்டு விருந்தில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் அந்த ஆண்டு சிறப்பாக அமையும் என்று நம்புகிறார்கள்.

 புத்தாண்டு பிறந்ததும் ஒவ்வொருவருக்கும் ஒருவர் முத்தமிட்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.

 டென்மார்க்

டென்மார்க்கில் பழைய தட்டுகளை வீசி எறிந்து புத்தாண்டை வரவேற்கின்றனர்.

 வீட்டு வாசலில் எவ்வளவு உடைந்த சமையலறை பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளது அந்த அளவுக்கு புதிய ஆண்டு சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

 பிலிப்பைன்ஸ் 

புத்தாண்டு தினத்தை பிலிப்பைன்ஸ் மக்கள் ஆப்பிள், திராட்சை மற்றும் பிலிப்ஸ் போன்ற 12 வட்டமான பழங்களை பரிமாறி கொண்டாடுகிறார்கள்.

 நாணயங்களை பிரதிபலிக்கும் அவற்றின் வடிவம் செழிப்பை குறிக்கும் .

ஸ்பெயின் 

கடிகாரத்தின் ஒவ்வொரு மணியையும் குறிக்கும் வகையில் புத்தாண்டு தினத்தன்று 12 திராட்சை பழங்களை சாப்பிடுவது ஸ்பெயின் நாட்டு மக்களின் வழக்கமாகும்.

 இதனால் வளமும், அதிர்ஷ்டமும் உண்டாகும் என்பது அவர்களின் நம்பிக்கை.

 திராட்சைகள் அனைத்தையும் சில நொடிகளில் சாப்பிட்டு முடித்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்பார்கள்.

 மெக்சிகோ

சோள மாவு, காய்கறி, சீஸ் , இறைச்சி ஆகியவை கலந்து தயாரிக்கப்பட்ட தமால் என்ற உணவை அனைவருக்கும் வழங்கி மெக்ஸிகோ மக்கள் புத்தாண்டை வரவேற்கிறார்கள்.

 ஜப்பான்

பழைய ஆண்டிலிருந்து விலகி புது ஆண்டுக்குள் அடி எடுத்து வைக்கும் பொருட்டு புத்தாண்டு தினத்தில் ஜப்பானியர்கள் சூடான நூடுல்ஸ் சாப்பிடுகின்றனர்.

 இது புதிய ஆண்டில் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கிரேக்கம் 

வருட பிறப்பு அன்று வெங்காயத்தை வீட்டின் நுழை வாசலில் கட்டி விடுவது கிரேக்கர்களின் வழக்கம் .
புத்தாண்டு தினத்தன்று இதுபோல் கட்டுவதால் வளர்ச்சி, மகப்பேறு, அதிர்ஷ்டம் ஆகியவை கிடைக்கும் என்பதே அவர்களின் நம்பிக்கை.

கருத்துரையிடுக

புதியது பழையவை