வீட்டிலிருந்து பல்லிகளை விரட்டும் ஆறு தந்திரங்கள்
1 . எலுமிச்சியில் உள்ள சிட்ரிக் அமிலமும், பூச்சிக்கொல்லி பண்புகளும் பல்லிகளையும், பூச்சிகளையும் விரட்டும்.
எலுமிச்சையை இரண்டாக வெட்டி சமையல் அறையில் வைத்தால் பல்லிகள் உள்ளே வராமல் தடுத்து விடும்.
2. முட்டை ஓடுகளை பல்லியில் இருக்கும் இடத்தில் வைக்கவும்.
முட்டையின் வாசனைக்கு பல்லிகள் தங்காது .ஆனால் இந்த முட்டை ஓடுகளை இரண்டு நாட்களுக்கு மேல் வைத்திருந்தால் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது .
3. வெள்ளரிக்காயின் வாசனை பல்லிகளுக்கு சகிக்கவே சகிக்காது.
பல்லிகள் நடமாடும் ஜன்னல்கள், கதவுகள் போன்ற இடங்களில் வெட்டப்பட்ட வெள்ளரி துண்டுகளை வைத்தால் பல்லிகள் கிச்சன் பக்கமே எட்டிப் பார்க்காது .
4. வலுவான மசாலா வாசனைகளிலிருந்து பல்லிகள் விலகி இருக்கும் அரைத்த பூண்டு அல்லது கிராம்பை சமையலறையின் மூலைகளில் வைத்தால் பல்லிகள் வராது.
5. சமையலறையில் அழுகும் உணவு பொருட்களால் பூச்சிகள் பெருகுகின்றன.
பூச்சிகள் அதிகமாக இருந்தால் அவற்றை சாப்பிட பல்லிகள் வரும்.
6. சமையல் அறையை சுத்தம் செய்தால் பூச்சிகள் வெளியேறும் அதன் பின் கரப்பான் பூச்சிகளும் வராது