அழகான கண்களுக்கு
கண்களை சுற்றி இருக்கும் தோல் எப்போதும் மிகவும் மென்மையானது.
கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்ய வேண்டிய ஒன்றாகும்.
பேசியல் செய்யும் போது கண்களை சுற்றி உள்ள தசைகளை வட்ட வடிவத்தில் மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள்.
குளிப்பதற்கு முன்பு சிறிது ஆலிவ் ஆயில் ,விளக்கெண்ணெய் ,பேபி ஆயில் எடுத்துக்கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்வதால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருப்பதோடு கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும்.
கண்களில் சோர்வு நீங்க மற்றொரு அருமையான இயற்கை மருந்து, வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும் .
கற்றாழை ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும்.
கற்றாழை, சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும், தீப்புண்ணிற்கும் கூட சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் கற்றாழை மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.
கண் புருவம், இமை இவைகள் அழகாக இருப்பதால்தான் கண்களும் எடுப்பாக அழகாக இருக்கும்.
கண் புருவத்தை த்ரெட்டிங் அல்லது வாக்சிங் மூலம் செட் செய்து கொள்வது நமது கண்ணை கவர்ச்சியாக தெரிய வைக்கும்.
புருவத்தில் குறைந்த முடியே இருந்தாலும் லேசாக த்ரெட்டிங் செய்யும்போது நல்ல எடுப்பாக இருக்கும் .
கூடிய மட்டும் புருவத்திற்கு பென்சில் உபயோகிப்பதை தவிருங்கள்.
கண் இமைகள் குறைவாக இருப்பின் அதன் அடர்த்தியை அதிகப்படுத்தி காட்டும் மஸ்காரார்களை உபயோகிக்கலாம்.
செயற்கை கண் இமைகளை ஒட்டும் போது அது தரமானதா ? அதற்கு உபயோகப்படும் பசை தரமானதா? என்று பார்த்து வாங்குங்கள்.
கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் ஐலைனர் ரோடு கீழெழும்பில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாது.
ஐ ஷேடோ முகநிறத்திலே போடுவது இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்ட்.
ஐசோட , ஐஸ் ஏடோவில் மூஸ் கிரீம், ஜெல் பவுடர் என பல ரேன்ஜ்களில் உள்ளது .
மஸ்காராவிலும் பல நிறங்கள் கிடைக்கின்றன.
அவரவர் சருமத்திற்கு தகுந்த நிறத்தை காஸ்மெட்டிக் கடை ஆலோசகரின் உதவி உடன் தேர்ந்தெடுங்கள்.
சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா ஹைலைடர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.
கண்களுக்கு உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐலைனர் போன்றவற்றை ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம்.
பழைய காஸ்மெட்டிக் கண்களை பாதிக்கும்.
இரவு உறங்கும் முன் கண் மேக்கப்பை முழுவதுமாக நீக்க வேண்டும் .
கண் மேக்கப் நீக்கவென்று ஐ மேக் அப் ரிமூவர் என்று கடைகளில் கிடைக்கிறது.
பேபி ஆயில் கொண்டும் கண் மேக்கப்பை நீக்கலாம்.