கைதிகளை இறக்குமதி செய்யும் நாடு
உலகில் பல நாடுகளில் சிறைச்சாலைகள் கைதிகளால் நிரம்பி வழிகின்றன.
ஆனால் கைதிகளை இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து கைதிகளை இறக்குமதி செய்யும் நிலைமைக்கு ஒரு நாடு தள்ளப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அந்த நாடு ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நெதர்லாந்து.
நெதர்லாந்தில் குற்ற சம்பவங்கள் குறைந்து கொண்டே வருகின்றன.
அதனால் கைதிகள் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக சிறைச்சாலைகளுக்கு மூடு விழா நடத்தி வருகிறார்கள்.
இதுவரை 20க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகளை அப்படியே மூடிவிட்டார்கள் .
இது நல்ல விஷயம்தானே என்கிறீர்களா? ஆம், நல்ல விஷயம்தான்.
ஆனால் சிறை துறையில் இருப்பவர்கள் வேலை இழக்கிறார்களே?
இத்துறையில் பணிபுரிந்த பலரையும் வேறு துறைகளுக்கு மாற்றிய பின்பும் கனிசமானவர்கள் உள்ளனர்.
எனவே தான் நார்வே, பெல்ஜியம் போன்ற நாடுகளில் இருந்து குற்றவாளிகளை நெதர்லாந்து இறக்குமதி செய்கிறது .
அதாவது அந்த நாடுகளுக்கு தங்கள் நாட்டு சிறைகளை இவர்கள் வாடகைக்கு விடுகிறார்கள்.
சிலைகளை அகதிகளுக்கான இருப்பிடமாக மாற்றுகிறார்கள்.
இந்த நடவடிக்கை மூலம் சிறைத்துறை ஊழியர்கள் பணியை காப்பாற்றுகிறார்கள் .
நெதர்லாந்தில் முழுதாக குற்றம் நடக்கவில்லை என்று கூற முடியாதது.
அரிதாக பெரிய குற்றங்களும் , பெரும்பாலும் சிறு சிறு குற்றங்களும் நிகழ்கின்றன .
அவற்று தொடர்புடையவர்களை சீர்திருத்த நிலையங்களுக்கும், மறுவாழ்வு மையங்களுக்கும் அனுப்பி விடுகிறார்கள்.
அதனால் தான் சிறைச்சாலைகள் கைதிகளில் இல்லாமல் காற்றாடுகின்றன.