மழைக்காலத்துக்கு ஏற்ற பேஸ் பேக்குகள்

மழைக்காலத்துக்கு ஏற்ற பேஸ் பேக்குகள் 
பெண்கள் ஒவ்வொரு பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்பவும் தங்கள் முகத் சரும பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.

 அதற்கு பேஸ் பேக்குகள் பெரிதும் உதவும்.

 முக சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கவும், சருமத்தில் தேங்கியுள்ள இறந்த செல்களை அகற்றவும், பருக்களை தடுக்கவும் பேஸ் பேக் உதவுகிறது .

அந்த வகையில் பெண்கள் மழைக்காலத்தில் முகத்தில் இடக்கூடிய பேஸ் பேக்குகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்:

 இவற்றில் தங்களுக்கு வசதியான பேஸ் பேக்கை பெண்கள் பயன்படுத்தலாம்.

 பன்னீர் திரவம் 

ஒரு கிண்ணத்தில் ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீர் திரவத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் அதில் ஆரஞ்சு தோல் பவுடர், துவரம் பருப்பு பவுடர் மற்றும் ஓட்ஸ் பவுடர் சேர்த்து விழுது போல ஆக்கிக் கொள்ள வேண்டும்.

 அதை முகத்தில் தடவி நன்கு காய வேண்டும் .

பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

 தக்காளி

தக்காளியை தூண்டாக வெட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் உறைய வைத்து எடுக்க வேண்டும் .

பின் அதை முகத்தில் தேய்க்க வேண்டும் .

இப்படி தினமும் செய்து வந்தால் தக்காளியில் உள்ள அமிலத்தன்மை, முகத்தில் திறந்து உள்ள சருமத்துளைகளை சுருங்கச் செய்யும்.

 தினமும் இவ்வாறு பயன்படுத்தும் போது சரும துளைகள் சுருங்கி முகம் பளிச்சென்று ஆகும் .

தேன் - எண்ணெய்கள் 

ஒரு கிண்ணத்தில் இரண்டு மேசை கரண்டி தேன் எடுத்து அத்துடன் நான்கு நேசிக்கரண்டி லாவண்டர் எண்ணெயை சேர்க்க வேண்டும்.

 பின் அதில் சில துளிகள் டீ - ட்ரீ எண்ணெய் சேர்த்து சில நிமிடங்கள் கலக்க வேண்டும் .

பின்பு அதை முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

 அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

 இந்த ஃபேஸ் பேக் பருப்பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் .

சந்தன பொடி

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அசல் சந்தன பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 அதில் அரை மேசை கரண்டி மஞ்சள் தூளை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் .

அதன்பின் பன்னீர் திரவம் சேர்த்து விழுதாக்கி முகம் கழுத்தில் தடவி காய வைக்க வேண்டும்.

 பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

 இந்த ஃபேஸ் பேக் சருமத்துக்கு நல்ல பொழிவை தரும் .

வாழைப்பழம் ஆப்பிள்

மிக்ஸர் ஜாரில் வாழைப்பழ துண்டுகள், ஆப்பிள் துண்டுகளுடன் பீச் பழ துண்டுகளையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் .

அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதனுடன் ஒரு மேசைக்கரண்டி தேனை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் .

பிறகு அதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் .
இந்த பழ பேஸ் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் முகம் முழு நிலவை போல பிரகாசம் தரும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை