நோயில்லா வாழ்விற்கு பெருங்காயம்
தீராத வயிற்று வலி
தீராத வயிற்று வலி தீர சிறிதளவு கட்டிப் பெருங்காயம் , சிறிதளவு வெந்தயம் இரண்டையும் எண்ணெயில்லாமல் வாணலியில் வறுத்து பொடி செய்யவும் .
இந்த பொடியினை நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் எப்படிப்பட்ட வயிற்று வலியும் சரியாகும்.
காது குத்தினால் வரும் வலி தீர ஒரு கரண்டி நல்லெண்ணையினை நன்கு காய வைத்து அதில் ஒரு கட்டி பெருங்காயத்தை பொரித்து அப்படியே ஆறவைக்கவும் .
ஆறிய நல்லெண்ணையினை காதில் ஊற்றி ஊற வைத்தால் காது வலி குணமாகும்.
பல் வலி தீர
சிறிய கட்டி பெருங்காயம், நான்கு கிராம்பு இரண்டையும் நீரில் கொதிக்க வைத்து அந்த நீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி போய்விடும்.
வறட்டு இருமல் நீங்க
பொடி செய்த பெருங்காயத்துடன் முட்டையின் மஞ்சள் கருவை கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் போய்விடும் .
கருப்பை சுத்தமாக
பொரித்த பெருங்காயம், பூண்டு இவற்றுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வந்தால் பிரசவத்திற்கு பிறகு கருப்பையில் உள்ள அழுக்கு வெளியேறி சுத்தமாகும்.
கக்குவான் இருமல் தீர
பெருங்காயத்தை நீரில் கரைத்து அந்த குழம்பினை குழந்தைகளின் நெஞ்சில் தடவி வந்தால் கக்குவான் இருமல் போய்விடும்.
தீராத தலைவலி தீர பெருங்காயம், மிளகு இரண்டையும் நீரில் நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரை சூடாக பருகினால் எப்படிப்பட்ட தலைவலியும் போய்விடும்.