நெய்யின் பலன்கள்
இரவு தூங்க செல்வதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நெய் ஒரு கப் சூடான பாலில் கலந்து குடிக்க மலச்சிக்கல் தீரும்.
இதில் இருக்கும் பியூட்டிக் அமிலம் குடலை சுத்தம் செய்து செரிமானத்திற்கு வழிவகுக்கும்.
மூக்கடைப்பு பிரச்சினையால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும் வேளையில் காலையில் எழுந்ததும் நெய்யை சிறிது எடுத்து லேசாக சூடு படுத்தி அடைத்துக் கொண்டிருக்கும் மூக்கில் சில துளிகள் விட உடனே மூக்கடைப்பு நீங்கும்.
அதோடு இதை தொண்டையில் இறங்கி சளிக்கு காரணமான தொற்றையும் நீக்கும்.
நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் உணவில் அல்லது சப்பாத்தியில் சிறிது நெய் கலந்து சாப்பிட உடலில் சேரும் மாவுச்சத்து குறையும்.
ஒரு டேபிள் ஸ்பூன் நெய் உடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் கலந்து தலையில் முடியில் தடவி 20 நிமிடம் கழித்து தலையை அலசினால் முடி மென்மையாகும்.
பொடுகு பிரச்சனைக்கு நெய்யுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து தலைமுடியின் வேர்க்கால்களில் தடவி வர வேர்க்கால்களில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.