முதுமையில் விழக்கூடாது

முதுமையில் விழக்கூடாது
 வயதாகும் போது முதுமையின் தள்ளாட்டம் பலரையும் தடுமாறி விழுகிறது.

 இப்படி விழுந்து அடிபடுவதும், எலும்பு முறிவு ஏற்படுவதும் அபாயகரமானது இது எல்லாம் தவிர்க்க வேண்டும்.

 இதை தவிர்க்க என்னென்ன செய்யலாம்.

 ஆறு மாதங்களுக்கு ஒரு முறையை காது கேட்கும் கருவி, கண்ணாடி ஆகியவற்றை டாக்டரிடம் பரிசோதித்து சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

 கேட்கும் திறனும் , பார்வையும் நன்றாக இருப்பது அவசியம்.

 நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகள் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுத்தும். இவற்றினால் விழ நேரிடுமா? என்று டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

 சாப்பிட்டு விட்டோ, படுக்கையை விட்டோ சட் என்று எழுந்து எழுந்திருக்காதீர்கள். 

ரத்த அழுத்த மாற்றங்களால் கண்கள் இருட்டிக் கொண்டு வரலாம் .தடுமாறி விழ நேரிடும் .

தட்பவெப்ப நிலை மாற்றங்கள் கூட உடலின் சமநிலையை பாதிக்கக்கூடும்.

 உங்களை வெயிலில் இருந்தும் குளிரியில் இருந்தும் நன்றாக பாதுகாத்துக் கொள்ளும் பழக்கமில்லாத இடங்களில் அல்லது மேடு பள்ளமான இடங்களில் நடக்கும் போது கைத்தடி அல்லது வாக்கர் பயன்படுத்தலாம் .

மழை அல்லது பனி பெய்யும் காலங்களில் நடக்கும் போது அதிக கவனம் தேவை .

இறுக்கமான அடிப்பகுதி கொண்ட குறைந்த உயரம் உள்ள காலணிகளை அணியுங்கள்.

 வளவளப்பான காலணிகள் வேண்டாம்.

 தற்போது பெரும்பாலமான கட்டிடங்களில் பளபளப்பான டைல்ஸ் போடுகிறார்கள்.

 இந்த தரை சுலபமாக வழுக்கி விடக் கூடியது.

 இரண்டு கைகளிலும் பொருட்களை எடுத்துக்கொண்டு மாடிப்படிகளில் ஏறாதீர்கள்.

 ஒரு கையில் பொருட்களை வைத்துக்கொண்டு மறு கையால் கைப்பிடியைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

 உயரமான இடங்களில் இருக்கும் பொருட்களை எடுப்பதற்கு மேசை ஸ்டூல் மீது ஏறாதீர்கள்.

 அதேபோல கீழே குனிந்து பொருட்களை எடுக்கும்போதும் கவனம் தேவை .

வீட்டில் நடமாடும் இடங்களில் போதுமான வெளிச்சம் இருக்கட்டும்.

 மிதியடிகள் தரை விரிப்புகள் தரையில் அழுத்தமாக படிமானமாக இருக்கட்டும்.

 இவற்றின் மேல் பகுதி சொர சொரப்பாக கால்களுக்கு பிடிமானம் தரக்கூடியதாக இருக்கட்டும்.

மாடிப்படிகளின் இரண்டு பக்கமும் கைப்பிடிகள் அழுத்தமாக பொருத்தப்பட வேண்டும். அவற்றை பிடித்தபடி படிகளில் ஏறவும்.

கழுவிவிடப்பட்ட தரைகளில் நடக்கும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.

 குளியலறையின் தரை வழுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

 தண்ணீர் தேங்கி நிற்பார் நிற்காமல் இருப்பது மிக மிக முக்கியம்.

 இரவு நேரங்களில் படுக்கை அறையில் சிறிய ஜீரோ வாட்ஸ் விளக்கு ஏறிய வேண்டும்.

 சுவீட்சுகள் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்க வேண்டும்.

 முதலில் விளக்கை போட்டுவிட்டு எழுந்திருங்கள்.

 தொலைபேசியும் பக்கத்தில் இருக்கட்டும்.

 சோபா நாற்காலி, டைனிங் டேபிள் ஆகியவை நடப்பதற்கு இடையூறாக இல்லாமல் சுவரை ஒட்டி இருக்கட்டும்.

 மின்சார வயர்களோ ? கேபிள் டிவி வயர்களோ? நடக்கும் இடத்தில் குறுக்கே போகாமல் இருப்பது நல்லது.

 வீட்டில் நீங்கள் உட்காருவதற்கு வசதியாக சோப்பாக்களும், நாற்காலிகளும் குறைந்த உயரத்தில் இருக்கட்டும்.

 தினமும் முறையான உடற்பயிற்சி மிக அவசியம் .

உடற்பயிற்சியை விடாது செய்பவர்களுக்கு தசைகளும், மூட்டுகளும் ,தசை நாறுகளும் வலிமையாக இருக்கும்.
 எலும்பு வலு விழத்தல் பிரச்சனையும் கட்டுக்குள் இருக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை