செம்பு குடத்தில் தண்ணீர் எதற்கு?
முந்தைய காலங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பும்போது செம்பு பாத்திரங்களை சீராக கொடுத்து அனுப்புவார்கள் .
தம்பதிகள் நோய் நொடி இல்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான் .
செம்பு பாத்திரத்தில் 24 மணி நேரம் குடிநீரை வைத்திருந்தால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணியிரிகள் எதுவும் அந்த நீரில் இருக்காது.
செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃபிளாக்சில் தண்ணீரை ஊற்றி வைப்பதால் செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும்.
பின்னர் அத்தண்ணியை குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும்.
குறிப்பாக இரவே செம்பு பாத்திரத்தில் அல்லது பிளாஷ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து அதனை காலையில் குடிக்கும் போது உடலுக்கு அதிக ஆற்றல் விரைவாக கிடைத்து அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.
செம்பு தாது நல்ல ரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால் செம்பு கலந்த நீரை குடிக்கும் போது ரத்தம் சுத்திகரிக்கப்படும்.
செம்பு கலந்த நீரானது எலும்பை உறுதி செய்யும் .
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் ரத்த சோகையை கட்டுப்படுத்தும்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கும், உடல் ஆரோக்கியம், உடல் வலிமையும் கிடைக்கும்.