மின்சார சிக்கனம்

மின்சார சிக்கனம்

தற்போது மின்சார பயன்பாடு மட்டுமில்லை அதன் கட்டணமும் அதிகமாகிவிட்டது.

 மின்சார சாதனங்களை எவ்வாறு எளிய முறையில் பயன்படுத்தி கட்டணத்தை கற்றுக் கொள் வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

 முன்னர் பொருத்தப்பட்ட மீட்டர்கள் மேக்னெட்டிக் மூலம் ஒரு சக்கரம் சுழலும்.

 அதை மிகச் சிறிய அளவு செலவாகும்.

 மின்சாரத்தை கணக்கில் கொள்ளாது.

 ஆனால் தற்போது எல்லா மின் இணைப்புகளுக்கும் ஸ்டேடிக் மீட்டர்கள் பொருத்தப்படுகின்றது. 

இவை துல்லியமாக மின்சார செலவினை கணக்கிடும்.

 மொபைல் சார்ஜர் பயன்படுத்தி விட்டு மறந்து சூட்சினை அணைக்காமல் இருந்தாலும் மின் கணக்கீடுகளை இந்த மீட்டர்கள் துல்லியமாக செய்கின்றன.

 ரிமோட்டில் அமைக்கப்பட்ட சாதனங்களில் ஸ்டேன்ட்பை மோடில் செலவாகும் மின்சாரத்தையும் மிக சரியாக கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.

 ரிமோட் கொண்டு அணைத்தாலும் அதன் சுட்விசினை நாம் அணைக்க தவறக்கூடாது. 

இரவு விளக்கிற்கு ஜீரோ வாட்ஸ் பல்புகளை பயன்படுத்தும் போது காலை எழுந்தவுடன் அணைத்து விட வேண்டும்.

 அதிலிருந்து ஐந்து முதல் பத்து வாட்ஸ் மின்சாரம் செலவாகும் .

எல்இடி விளக்கு ஒரு டியூப் லைட் 40 வாட்சை வரை மின்சாரம் செலவிடக் கூடியது அதற்கு பதிலாக led பல்புகள் 20 வாட்சில் அதே அளவு வெளிச்சத்தை தரக்கூடியது.

 குளிர்சாதன பெட்டி இல்லாத வீடே இல்லை.

 இவற்றுக்கு சீராக மீன் விநியோகம் செய்யும் போது ஸ்டெபிலைசர் ஐ பலர் அணைத்து வைப்பதில்லை.

 மின்சார்ஜிங் உபகரணம், கைப்பேசி சார்ஜ் பேங்க், கொசு பேட், கொசு விரட்டி இன்வென்டர், வாக்குவம் கிளீனர் என்று சார்ஜ் செய்ய என்று நிறைய மின்சாதனங்கள் வந்துவிட்டது.

 இதனை குறிப்பிட்ட நேரம் மட்டுமே சார்ஜ் செய்து மின் சிக்கன பலனை பெறலாம்.

 தவிர்க்க வேண்டியவை 

பிரிட்ஜை அடிக்கடி திறந்து மூடுவதை தவிர்க்கலாம் .

பிரிட்ஜ் மற்றும் ஏசியை அடிக்கடி சுத்தம் செய்வது சிறந்தது.

 ஏசியை மிதமான குளிரில் வைப்பது நல்லது .

மின் சாதனங்கள் வாங்கும் பொழுது நல்ல தரமான நட்சத்திர குறியீடு உள்ளதை வாங்குவது நல்லது.

 ஒரே அறையில் அமர்ந்து உண்பது, பேசுவது, டிவி பார்ப்பது, தேவையற்ற மின் உபகரணங்களின் பயன்பாட்டினை குறைக்கும்.

 வீட்டை விட்டு வெளியூர் செல்லும்போது மின்சார உபகரணங்களின் இயக்கத்தை நிறுத்தி இருப்பதை உறுதி செய்வது நல்லது.
 இண்டக்ஷன் ஸ்டவ் மற்றும் அடிக்கடி உணவை சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை