இனிதே செய்யுங்கள் இன்வெர்ட்டர் பராமரிப்பு

இனிதே செய்யுங்கள் இன்வெர்ட்டர் பராமரிப்பு

கோடை காலங்களில் மின் வெட்டு நேரத்தில் சமாளிக்க ஒரே வழி வீடுகளில் இன்வெர்ட்டர் பொருத்திக் கொள்வதுதான்.

 இன்வெர்ட்டரையும் அதன் பேட்டரியும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

 அப்படி பராமரித்தால் மட்டுமே இன்பெக்டரின் ஆயுள் நீடிப்பதோடு அது சிறப்பாக இயங்கும் .

 இன்வெர்ட்டர் பேட்டரியை வீட்டில் இருக்கும் மற்ற பொருட்கள் போன்று சுத்தமாக வைத்திருங்கள் .

இன்வெர்ட்டர் பேட்டரியின் டெர்மினல்களை பேக்கிங் சோடா கலந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

 அப்போதுதான் பேட்டரி முழு திறனுடன் சார்ஜாகி மின் வெட்டு நேரத்தில் பயன்படும் .

இன்வெர்ட்டர் பேட்டரி வைக்கும் இடத்தில் போதுமான காற்றோட்டம் இருக்க வேண்டும் .

நேரடி சூரிய ஒளிபடும் இடமாகவோ ? சமையலறை போன்ற வெப்பமான இடமாகவோ ? இருக்கக்கூடாது.

 இதை பாதுகாப்பாக வைப்பது உறுதி செய்யவும் .

பேட்டரி இயங்கும்போது வெப்பம் அதிகரிக்கும் நிலையில் நேரடியாக வெப்பம் படும் இடத்திலிருந்து அதிகப்படியான நீர் ஆவியாக கூடும்.

 பேட்டரியின் ஒவ்வொரு கலத்திலும் இருக்கும் நீர் அளவை சரிபார்த்துக் கொள்ளவும்.

 தேவைப்படும் நேரத்தில் டிஸ்டில்டு வாட்டர் ஊற்ற வேண்டும்.

 அதிகப்படியாக ஊற்றி வைத்தால் பொங்கிவிடும்.

 அந்த தண்ணீர் தரையில் பட்டால் தரையெல்லாம் அமிலம் அரித்தது போல் ஆகிவிடும்.

 தண்ணீரின் அளவு மிகவும் குறைந்தாலும் சார்ஜ் செய்தால் போதுமான அளவு பேக்கப் கிடையாது.

 எனவே இன்வெர்ட்டர் பேட்டரி நீண்ட நேரம் உழைக்க வேண்டும் என்றால் முறையாக பராமரிக்க வேண்டும்.

 மின்வெட்டு ஏற்படாத காலங்களில் நீண்ட நாட்கள் இன்வெர்ட்டர் பயன்படுத்த தேவையில்லாத சூழல் ஏற்படலாம்.

 அப்படி பேட்டரியை பயன்படுத்தாத போது அது பேட்டரியை டிஸ்டார்ஜ் செய்துவிடலாம்.

 திடீரென மின்வெட்டு ஏற்படும் போது அது நமக்கு நீண்ட நேரம் மின் வசதியை வழங்க முடியாமல் போகலாம்.

 ஒரு முறை ஏதும் பயன்படுத்தி பேட்டரியை மீண்டும் சார்ஜ் செய்து வைப்பதை வழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள் .

இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரியை இணைக்கும் வயர்கள் நன்றாக இருக்கின்றனவா? என்பதையும் அவ்வப்போது சோதிக்க வேண்டும்.

 அவற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் சார்ட் சர்க்யூட் ஆகி விபத்துகள் நேரிடலாம். கவனம் தேவை.

 லாரியில் உள்ள பேட்டரி இருக்கும் பெட்டியில் "தினமும் என்னை கவனி" என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.

 லாரி ஓட்டுநர் நாள்தோறும் பேட்டரியை தவறாமல் பராமரித்து இயக்க வேண்டும் என்பதுதான் இதன் முக்கிய நோக்கம் .
வீட்டில் வாங்கி வைக்கும் பேட்டரிக்கும் இது பொருந்தும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை