தேனும் சில உண்மைகளும்

தேனும் சில உண்மைகளும் 

தேனில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், தாதுக்கள் உட்பட ஆரோக்கியமான சத்துக்கள் பலவும் நிரம்பியுள்ளன.

 தேன் சாப்பிடுவதால் இருமல் நீங்கும். குடல் சுத்தமாகும். புண்கள் மற்றும் தீக்காயங்கள் ஆறும். சருமத்திற்கு மிகவும் நல்லது.

 காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் தேனை கலந்து சிலர் குடிப்பதுண்டு. இப்படி செய்வதால் நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு உறிஞ்சப்பட்டு உடல் எடை குறையுமென்று நம்பப்படுகிறது.

 ஆனால் தேனை நேரடியாக சூடான பால், வெதுவெதுப்பான நீர், சூடான எலுமிச்சை நீர் அல்லது தேநீருடன் கலந்து குடிக்க கூடாது என்றும் அப்படி செய்வது பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.

 சூடான தேன் ஆனது நமது உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதோடு, ஸ்லோ பாய்சன் ஆக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

  செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுகின்றனவா? தவிர அந்த தேனானது அதிக வெப்பநிலையில் சுடுபடுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்படுகின்றனவா? என்பதை பார்க்க  வேண்டும். எனவே தேனீக்கள் இடமிருந்து நேரடியாக பெறப்படும் இயற்கையான தேனை நம்பகமான விற்பனையாகங்களில் வாங்கி உபயோகிப்பது நல்லது.


கருத்துரையிடுக

புதியது பழையவை