தனித்துவம் உணர்த்தும் இனிய நெறிகள்

தனித்துவம் உணர்த்தும் இனிய நெறிகள் 

சுய ஒழுக்கமும், நேர்மறை எண்ணமும், மென்மையான பண்புகளும் உங்களை பெரும் கூட்டத்திலும் தனித்து அடையாளம் காட்டும்.

 அப்படிப்பட்டவராக மாறுவதற்கு சில வழிகள் :

1. ஏதோ ஓரிடத்தில் நீங்கள் நிராகரிக்கப்படும் போது, ஏதாவது ஒரு வாய்ப்பு உங்களுக்கு மறுக்கப்படும் போது அதற்காக அச்சம் கொள்வதை நிறுத்துங்கள் . அப்போதுதான் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் தடைப்படாமல் இருக்கும்.

2. உங்கள் வாழ்க்கையை எந்த நிமிடத்திலும் இனிதாக மாற்றி விட முடியும். ஆனால் அதற்கான முடிவை எடுப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

3.  துன்பங்களை அனுபவிக்கிறவர்களே மகத்தான சாதனைகளை நிகழ்த்தும் வலிமை பெறுகிறார்கள். வலியை தருபவர்களுக்கு வலிமை கிடைப்பதில்லை.

4. உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது, எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதே முக்கியம். பிரச்சனையாக எடுத்துக் கொள்பவர்கள் முடங்குவார்கள். பாடமாக எடுத்துக் கொள்பவர்கள் வளருவார்கள்.

5. நமக்கு பாதுகாப்பான வசதியான சூழல்களில் மட்டுமே இருந்தால் வளர்ச்சி சாத்தியமில்லை. புதிய இடங்களும் எதிர்பாராத நெருக்கடிகளும், திடீர் பிரச்சனைகளும் நம் வளர்ச்சிக்கு ஆதாரங்களாகவே இருக்கும் .

6. நிறைய தியாகங்கள் செய்வதற்கு தயாராக இருங்கள். பல வெற்றிகள் உங்களைத் தேடி வரும் '

7.வாழ்க்கையில் இது தான் என் இலக்கு என்று தெளிவாக முடிவு எடுத்து செயல்படுங்கள் .அப்படி இலக்கு இல்லாதவர்கள் எந்த இடத்துக்கும் சீக்கிரம் போய் சேராதவர்கள் .

8 . உங்களின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக செய்யப்படும் எந்த முதலீட்டையும் சுயநலமாக நினைக்காதீர்கள். அது மதிப்பான செயல் பல மடங்கு லாபத்தை அது திருப்பி தரும் ஒன்பது ஒரு நேரத்தில் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவது உங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாற்றும் நல்ல பழக்கம்.

 10. தேவை மற்றும் சூழ்நிலை காரணமாக மற்றவர்களிடம் சில பொய்கள் சொல்லலாம் ஆனால் உங்களுக்கு நீங்களே பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உண்மையாக வாழ முடியும் வளரவும் முடியும்....

 11. உங்களை விட மேல இருக்கும் மனிதர்களிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை வைத்து உங்களை யாரும் மதிப்பிடுவதில்லை எளிய மனிதர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பது தான் உங்களின் உண்மையான அடையாளமாக இருக்கும் .அன்பும் பணிவும் ஆக இருங்கள்.

 12 எத்தனை நண்பர்களும் உறவுகளும் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை முக்கியமில்லை இருக்கும் நண்பர்களிடமும் உறவுகளிடமும் எத்தனை ஆழமாக நீங்கள் பழகுகிறீர்கள் என்பதே முக்கியம்

1 கருத்துகள்

புதியது பழையவை