கணவன் மனைவி உரையாடல்
மனைவி : நீ இன்ஜினியரிங் தானே படிச்சே...!?
கணவன் : என்ன... இப்படி கேட்டுட்ட...!?
மனைவி : கேக்குறேன்ல சொல்லு...
நீ இன்ஜினியரிங் தானே படிச்ச...!?
கணவன் : ஆமா...
இப்ப அதுக்கென்ன...!?
மனைவி :
கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு...
வட்டத்தின் சுற்றளவுக்கு என்ன
பாஃர்முலா தெரியுமா...?
கணவன் : சுற்றளவு means சர்க்கம்ப்ஃரன்ஸ் தானே...!?
மனைவி : ஆமா...!?
கணவன் : Circumference of a Circle
C = 2 × π × r.
மனைவி : சரி... அதே சர்க்குலுக்கு பரப்பளவுக்கு என்ன பாஃர்முலா...!?
கணவன் : சர்க்கிள் ஏரியாவுக்குத்தானே...?
A = π × r²
மனைவி : பாஃர்முலால்லாம்
கரெக்டாத்தான் சொல்ற...?
கணவன் : பின்ன...
காலேஜ் ப்ராஜக்ட்ல
ஒரு வட்ட வடிவ லைட்ஹவுசுக்கு
எத்தன மூட்டை சிமெண்ட் எத்தன லோட் ஜல்லி வேணும்னு துல்லியமா கால்குலேட் பண்ணி சொல்லி ப்ராஜக்ட்ல சென்ட்டம் வாங்கினவனாக்கும்....
மனைவி : அதையெல்லாம் கரெக்ட்டா பண்ணிட்டு இத மட்டும் ஏன் சொதப்புன...?
கணவன் : எத...?
மனைவி :
15 செ.மீ. விட்டமும்
15 செ.மீ உயரமும் உள்ள
ஒரு பால் பாத்திரத்தை வெளக்க
எவ்ளோ சபீனா பவுடர் தேவைன்னு தெரியாதா உனக்கு...?
கணவன் : ஏன் என்னாச்சி...!?
மனைவி : அந்த ஒரு பாத்திரத்த
வெளக்க பாதி பாக்கெட் சபீனா
பவுடரை காலி பண்ணிருக்கியே...
நீ இன்ஜினியருக்குத்தான படிச்ச...?