கைப்பேசி எச்சரிக்கை தேவை
கைபேசி பயன்படுத்த விட்டாலும் அதன் கோபுரங்களில் கதிர்வீச்சும் பிறரின் பயன்பாட்டின் போதான கதிர்வீச்சும் பாதிக்கவே செய்யும்.
இதனால்தான் குருவிகள் நகர் புறங்களில் இருந்து காணாமல் போய் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எப்போதும் கைப்பேசியை பயன்படுத்தாமல் அவசியத்திற்கு பயன்படுத்துவது நல்லது.
முடிந்த அளவு கைபேசிகளை உபயோகிக்காமல் தவிருங்கள்.
தரைவழி தொலைபேசியை உபயோகிக்கும் வசதி இருந்தால் அதை பயன்படுத்தவும்.
சுருக்கமான செய்தியை தெரிவிக்க வேண்டும் என்றால் கைபேசியில் பேசுவதை தவிர்த்து எஸ் எம் எஸ் அனுப்பலாம்.
குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுலபமாக கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
கைப்பேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில் பேச வேண்டாம் கதிர்வீச்சு பாதிப்பு அதிகம்.
காதில் வைத்து பேசுதல், ஹெட்போனில் பேசுதல் போன்றவைகளை விட கைபேசியில் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது .பொது இடங்களில் இவ்வாறு பேச வேண்டாம் .
தூங்கும் பொழுது அருகிலேயே வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் இருந்தால் அதை உடனே கைவிடவும்.
நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஏற்றவுடன் கைபேசியை காதில் அருகில் கொண்டு வந்து பேசவும் ரிங் போகும்போது காதில் வைத்திருக்க வேண்டாம் ஏனென்றால் பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சின் அளவைவிட ரிங்கு போகும்போது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
கைப்பேசியை வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும்.
வலது பக்க காதில்தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
முக்கியமாக பயணம் செய்யும்போது கைபேசியில் விளையாடுவதை முற்றிலுமாகத் தவிருங்கள்.
ஏனென்றால் கண்கள் சிரமம் எடுத்துப் பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
கைப்பேசிகளை சட்டையின் இடது பாக்கெட்டில் வைக்க வேண்டாம் இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம் .
கைபேசியில் பேசும் போது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும்