நச்சுக்கிருமிகளை அழிக்கும் முந்திரி பழம்
கல்லீரல்
முந்திரி பழம் சாப்பிடுவதால் கல்லீரல் உட்பட உடலின் எல்லா பாகங்களையும் சுத்தப்படுத்துகிறது.
இப்பழத்தின் சிறிய காரத்தன்மையால் கல்லீரல் உள்ளிட்ட உடலின் அனைத்து நச்சு கிருமிகளை அழித்து கழிவுகளை வெளியேற்றுகிறது.
கொலஸ்ட்ரால்
முந்திரி பழம் சாப்பிடும் போது நமது உடலில் உள்ள காெழுப்பினை எதிர்த்து நமக்கு தேவையான சக்தியை வழங்குகிறது.
எலும்புகள்
எலும்புகளுக்கு தேவையான பாஸ்பரஸ், மெக்னீசியம் , கால்சியம் போன்ற சத்துக்கள் இப்பழத்தில் காணப்படுகிறது.
இதனை சாப்பிடுவதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
புற்றுநோய்
இப்பழத்தில் காணப்படும் சுவையான காரத்தன்மை நுரையீரல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
மலச்சிக்கல்
நமது உடலில் நீர் சத்து குறைவதால் மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பிரச்சனை ஏற்படுகிறது.
முந்திரி பழம் சாப்பிடும்போது இப்பழத்தில் உள்ள சார்பிட்டால் என்ற வேதிப்பொருள் உடலில் சென்று பெருங்குடலுக்கு தேவையான நீர் சத்தினை வழங்கி கழிவுகளை சுலபமாக அகற்ற உதவுகிறது.
இதய பிரச்சனை
முந்திரி பழத்தில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து மாரடைப்பு போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது .
தோல் பிரச்சனை
முந்திரிப் பழத்தில் உள்ள வைட்டமின் சி ஆண்டி ஆக்சிடென்ட்கள் தோலில் உண்டாகும் அரிப்பு, சுருக்கம் மற்றும் வெடிப்பு போன்றவற்றை போக்குகிறது.
ஆஸ்துமா
ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளிலிருந்து குணமாக முந்திரி பழச்சாறு சாப்பிட்டால் போதும்.
மிக பயனுல்ல தகவல்,நன்றி.
பதிலளிநீக்குநன்றி, தங்களின் ஆதரவை மென்மேலும் தருக.....!
நீக்கு