பற்பசையின் பயன்கள்
தினமும் காலை எழுந்தவுடன் நாம் செய்யும் முதல் வேலை பற்பசைக் கொண்டு நம்முடைய பற்களை சுத்தம் செய்வதுதான்.
நம் வாயில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்ட இந்த பற்பசையில் பல எண்ணில் அடங்கா பயன்கள் உள்ளன .
1.காலில் ஒட்டிக்கொண்ட தாரை பற்பசை தடவி கழுவி தான் போய்விடும்.
2. கண்ணாடி பொருட்களில் உள்ள தூசியை அகற்ற சிறிது பேஸ்ட்டை தடவி அழுத்தி துடிக்க வேண்டும் .
3.சிடி டிவியில் கீறல்கள் உள்ள இடங்களில் சிறிது பேஸ்ட்டை வைத்து லேசாக தேய்த்து துடைக்க கீறல் மறையும்.
4.வைர கம்மல் மூக்குத்தி, மோதிரம் பளபளக்க டூத் பிரசில் லேசாக பேஸ்ட் வைத்து மெதுவாக தேய்த்து கழுவலாம்.
5. துணிகளில் லிப்ஸ்டிக்கரை, இங்க் கரை இருந்தால் கொஞ்சம் பேஸ்ட்டை வைத்து தேய்த்து அலசலாம் .
6.உங்களின் குழந்தை சுவர்களில் கிறுக்கிய கிரேயான் கிறுக்கல்கள் உள்ள இடங்களில் டூத் பேஸ்ட்டை தைத்து ஒரு கிழிந்த துணியை நீரில் நினைத்து துடைக்க சுவர் பளபளப்பாகும் .
7.கார் பெட்டியில் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருக்கும் கரைகளை பற்பசையை வைத்து தேய்த்து அலசலாம் .
8.கொசுக்கள் கடித்த இடங்களில் பற்பசியை தடவ வலியும் அரிப்பும் விலகும் .
9.ஆணி அடித்த ஓட்டையை நிரப்ப டுத் பேஸ்டி பயன்படுத்துங்கள் .
10.கார் ஹெட் லைட், டூவீலர் ஹெட் லைட் சுத்தம் செய்ய டூத் பேஸ்ட்டை தண்ணீரில் கரைத்து அந்த நீரால் துடைக்க பளிச்சிடும்.
11.பரு உள்ள இடத்தில் விரைவில் டூத் பேஸ்ட்டை தடவி விட்டு தூங்கி காலையில் பார்த்தால் பரு காணாமல் போகும்.
12.வெள்ளி பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்ய டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம்.
13. பர்னிச்சர்களில் தேநீர் கப்பை வைக்கும் போது படியும் தேனீர் கரை உள்ள இடத்தில் டூத் பேஸ்ட்டை தடவி பின் நீரால் கழுவ கரை காணாமல் போகும்.
14.சமையலறையில் கைகளில் சூடு பட்டால் உடனே அந்த இடத்தில் குளிர் நீரை ஊற்றி அங்கு டூத் பேஸ்ட் தடவினால் எரிச்சல் குறையும் .
15.பாத்ரூம் குழாயில் பிடித்துள்ள துருவை போக்க டூத் பேஸ்ட்டை பயன்படுத்தலாம்.