நகம் சொல்லும் செய்தி
நகங்கள் கெரட்டின் என்று சொல்லக்கூடிய ஒருவகை கடினமான புரோட்டின் பொருள்களால் ஆனது.
மேட்ரிக்ஸ் நகத்தின் இதய பகுதியாகும்.
இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகிறது.
நகத்தின் வளர்ச்சி மற்றும் தோற்றம் மனித உடல் நலத்தின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது.
நகங்களை உண்ணிப்பாக கவனித்தால் உடலில் என்ன பிரச்சனை என்று அறிந்து கொள்ளலாம் .
நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால் சயனாேலி என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறது என்று பொருள்.
அதாவது ரத்தத்தில் சரியாக இருக்கவேண்டிய ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கிறது .
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம் புகைப்பிடிப்பதால் நிக்கோட்டின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம்.
மங்கலான நீண்ட கோடுகள் தோன்றினால் மூட்டு வலி என்பது பொருள்.
இருதய நோய் நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து பருத்து பளபளவென்று முருங்கைக்காய் போன்று இருக்கும்.
நகத்தில் சின்ன சின்ன குழிகள் உண்டாகி அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்.
நகங்களில் கருமையான பழுப்பு நிற கோடுகள் காணப்பட்டால் அது மெலனோமாவிற்கான (சரும புற்று நோய்) அறிகுறி என்பது பொருள்.