இல்லத்தரசிகளின் கவனத்திற்கு

இல்லத்தரசிகளின் கவனத்திற்கு
 காலை வெறும் வயிற்றில் நீர் ஆகாரம் சாப்பிட்டு வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும் .

மதிய வேளையில் தேனை வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் உடல் இளைக்கும்.

 பெண்கள் பிரசவக் காலத்திற்கு பத்து தினங்களுக்கு முன்பு இருந்தே அரை சங்கு வீதம் துளசி சாற்றை குடித்தால் சுகப்பிரசவம் ஏற்படும் .

கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் .

கல்யாண முருங்கை இலை சாற்றை தினமும் காலையில் தொடர்ந்து பத்து நாள் சாப்பிட்டு வர மாதவிலக்கு ஆவதற்கு முன்பும் மாதவிலக்கு ஆன பிறகும் ஏற்படும் கடுமையான வயிற்றுவலி நீங்கும் .

இரவு நிலக்கடலை சார்ந்த பண்டங்களை திண்ணக்கூடாது.

 பேரிச்சம் பழத்தை கூழாக்கி பாலில் கொதிக்க வைத்து பருகி வந்தால் பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் கைகால் மூட்டு வலி சரியாகும்.

 பழைய சோற்றில் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் உடல் வலுப்பெறும்.

 அவசரம் அவசரமாகவும் பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.

 வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.

 மூட்டு வலிகளுக்கு சுக்கை அரைத்து பற்று போடலாம் .

சுக்கை தாய்ப்பால் விட்டு வைப்போல் அரைத்து வெற்றியில் பற்று போட்டால் தலைவலி குணமாகும் .

பெண்கள் கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும் சொறி சிரங்கு மீது பூண்டு சாறு தடவ குணமாகும்.

 தொப்புளை சுற்றி தேனை தடவினால் உஷ்ணம் வயிற்று வலி குணமாகும்.

 சிரகம் வறுத்து பொடி செய்து அதை வாழப் பழத்துடன் சேர்த்து சாப்பிட நன்கு தூக்கம் வரும்.

 சர்க்கரையை நாக்கில் வைத்தால் தொடர் விக்கல் நின்று விடும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை