கரிசலாங்கண்ணி
கீரைகளில் ராணி என அழைக்கப்படும் இந்த கரிசலாங்கண்ணி கீரையில் ஏராளமான மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன.
இதில் இரு வகை உண்டு மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி .
மஞ்சள் கரிசலாங்கண்ணியை அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.
வெள்ளை கரிசலாங்கண்ணியை அதன் வெள்ளை நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம் .
இதன் இலை சாறை இருத்துளி தேனில் கலந்து பிறந்த குழந்தைகளுக்கு கொடுத்தால் ஜலதோஷம் சரியாகும்.
கரிசலாங்கண்ணியை நல்லெண்ணெயில் அரைத்து யானைக்கால் நோய் உள்ளவர்களுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.
சிலருக்கு சிறுநீரில் ரத்தம் வரும். அவர்கள் தினமும் இந்த இலை சாறை கால் முதல் அரை ஆழாக்கு இருவேளை எடுத்துக்கொள்ள விரைவில் குணமாகும் .
மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது .
கரிசலாங்கண்ணி கீரை கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் ரத்த சோகை நோய்க்கு, கரிசலாங்கண்ணி சாறை 100 மில்லி அளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் ரத்த சோகை நீங்கிவிடும் .
ரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராக செயல்படும்.